Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இடிக்கப்படும் முக்கிய பஸ் ஸ்டாண்ட்! இன்னும் 30 நாட்கள்தான்.. மொத்தமாக இடமாற்ற முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட உள்ளது. அங்கே புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட உள்ள நிலையில் தற்போது அங்கே நிறுத்தப்படும் பேருந்துகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த புதிய பேருந்து எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

Tamilnadu Bus

இந்த திட்டம் ரூ.823 கோடியில் மேம்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு ரூ.200 கோடியை மாநில அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற தொகை தனியார் உதவி, வங்கிகள் உதவியுடன் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிராட்வே பேருந்து நிலையம்

சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட உள்ள நிலையில் இந்த புதிய பேருந்து நிலையம் எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மொத்தம் 4 மாடல்கள் இதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ஒன்று தேர்வாகும்.

இது போக அண்ணாநகர் (மேற்கு), கலைஞர் கருணாநிதி (கே.கே.) நகர் மற்றும் மந்தைவெளியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கப்படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் சென்னை மெட்ரோ மூலம் மேற்கொள்ளப்படும்.

Tamilnadu Bus

பேருந்து நிலையங்கள் மாற்றம்

அதேபோல் சென்னை மாநகராட்சியின் GCC சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை புதிய தரத்திற்கு கேட்ஸ் எழும் பணியில் உள்ளது. தரைத்தளம், கை பிடிகள், கூரை, விளக்கு ஏற்பாடுகள், சாய்வு பாதை அமைப்பது, இருக்கை பழுது பார்ப்பது, தொட்டிகள் வைப்பது போன்ற பல மாற்றங்களை செய்து வருகிறது.

சென்னையில் உள்ள முக்கியமான பல பேருந்து நிலையங்கள் அடுத்த 2 மாதங்களில் அடையாளம் தெரியாமல் மாற்றப்பட உள்ளன. சென்னையின் எல்லா ஏரியாக்களில் உள்ள பேருந்து நிலையங்கள் மாற்றப்பட உள்ளன. ஏற்கனவே தொண்டியார்பேட்டை, கவியரசு கண்ணதாசன் நகர், முல்லை நகர், திரு.வி.க.நகர், பெரியார் நகர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான மொத்த செலவு ₹80 கோடி. தி.நகர், ஆவடி, வள்ளலார் நகர், திருவான்மியூர், பாடியநல்லூர், ஐயப்பன்தாங்கல் ஆகிய பேருந்து நிலையங்கள் அடுத்த இந்த மே மாதத்திற்குள் நவீனப்படுத்தப்படும்.

Tamilnadu Bus

அதேபோல் அடுத்த 4 மாதங்களில் ஆறு பேருந்து நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மோசமான நிலையில் உள்ள 6 டெர்மினிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும் என சிஎம்டிஏ கடந்த ஆண்டு அறிவித்தது. அடுத்த ஆண்டு மேலும் ஆறு டெர்மினிகள் நவீனமயமாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதன்படி 2024க்குள் தி.நகர், ஆவடி, வள்ளலார் நகர், திருவான்மியூர், பாடியநல்லூர், ஐயப்பன்தாங்கல். பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) நகரத்திலும் அதைச் சுற்றியும் 30க்கும் மேற்பட்ட டெர்மினல்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

குத்தம்பாக்கம்

ஏற்கனவே சென்னையில் அமைக்கப்பட்டு வரும் புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்த 50 நாட்களில் திறக்கப்பட உள்ளது. 427 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2025ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் மக்களுக்காக திறக்கப்படும்.

Tamilnadu Bus

90 சதவிகிதம் இதன் கட்டுமானம் முடிந்துள்ளது. அழகுபடுத்தும் பணிகள், மின்சார இணைப்பு பணிகள் உட்பட்ட 10 சதவிகித பணிகள் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. இது போக அம்பத்தூர் மற்றும் தொண்டியார்பேட்டை பேருந்து முனையங்களில் முறையே 57 மற்றும் 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். இதன் சீரமைப்புப் பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இது போக செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் உள்ள ஒன்பது பெருநகர பேருந்து முனையங்கள் பயணிகள் பயணத்தை எளிதாக்கும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+