600 GB டேட்டா.. இலவச ஓடிடி சந்தா! ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவை தூக்கி சாப்பிடும் BSNL! பலே பிளான்!
சென்னை: ஜியோ, ஏர்டெல், VI போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் பிளான்களின் விலை வெகுவாக அதிகரித்து உள்ளதால், மொபைல் யூசர்கள் சிறந்த பிளான்களை தேடி வருகின்றனர். பட்ஜெட்டுக்கு ஏற்ற நெட்வொர்க்கை தேடும் யூசர்களின் பிரதான தேர்வாக மாறியுள்ளது பி.எஸ்.என்.எல். காரணம், அதன் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் அதிரடியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. இந்த நிறுவனங்களின் அனைத்து ப்ரீபெய்டு திட்டங்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டதால் மக்கள் வெகுவாக அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். குறைந்த விலையில் கலக்கலான பிளான்களை வழங்கி வருகிறது.

அசத்தும் பி.எஸ்.என்.எல்: தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட மிகக் குறைவான விலையில் அதிக பலன்களை தரும் ப்ரீபெய்டு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருவதால் மொபைல் போன் பயனர்கள் மத்தியில் பி.எஸ்.என்.எல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கி உள்ளது. பலர் தங்களுடைய மொபைல் எண்களை BSNL-லுக்கு போர்ட் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.என்.எல்லின் ஒரு செம்மையான ரீசார்ஜ் பிளான் பற்றி பார்க்கலாம்.
பி.எஸ்.என்.எல் வழங்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2,999 ரீசார்ஜ் பிளான் மூலம் இணைய சேவையை ஆண்டு முழுவதும் தடையின்றி பயன்படுத்தலாம். பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் ஒரு வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் 600 ஜி.பி டேட்டாவை வழங்குகிறது. அதிக அளவில் டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிளான் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
BSNL ரூ.2,999 பிளான்: இந்த 2999 திட்டத்தில், 600 ஜிபி டேட்டா வரம்பிற்கு பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டா இலவசமாக வழங்கப்படும். பி.எஸ்.என்.எல் வழங்கும் இந்த வருடாந்திர திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் இலவசம். அத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறலாம்.
ஓடிடி இலவசம்: பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் மூலம் ஓடிடி தள அணுகல் மற்றும் இதர இலவச நன்மைகளும் கிடைக்கும். இதில் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் EROS NOW Entertainment சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக கிடைக்கிறது. இதில் ஏராளமான படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். மேலும், ஒரு மாதத்திற்கான இலவச BSNL ட்யூன் சப்ஸ்கிரிப்ஷனை பெறலாம்.
4ஜி வந்துக்கிட்டே இருக்கு: பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களை ஈர்க்க, தனது 4G சேவைகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. சமீபத்தில், பி.எஸ்.என்.எல் தங்களுக்குச் சொந்தமாக 15,000க்கும் மேற்பட்ட 4ஜி நெட்வொர்க் டவர்கள் செயல்பாட்டில் உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 மாதங்களில் 4ஜி வேகத்தில் இணையதள சேவை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications