18 ரூபாய்க்கு பெஸ்ட்டா பண்ணி தரோம்.. டேட்டா+ பலன்களை கொட்டிக் கொடுக்கும் BSNL பிளான்கள்! ஜியோ அவுட்!
சென்னை: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் கடந்த மாதம் ரீசார்ஜ் கட்டணங்களை 25% அளவுக்கு உயர்த்திய நிலையில், ஏராளமானோர் பிஎஸ்என்எல் நோக்கி திரும்பி வருகின்றனர். மிகக் குறைந்த விலையில் அட்டகாசமான பிளான்களை வழங்குகிறது பி.எஸ்.என்.எல். அவை குறித்து பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் சமீபத்தில் அதிரடியாக கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. அனைத்து ப்ரீபெய்டு திட்டங்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த சூழலில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். குறைந்த விலையில் பிளான்களை வழங்கி வருகிறது.

தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட மிகக் குறைவான விலையில் அதிக பலன்களை தரும் ப்ரீபெய்டு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமானோர், பி.எஸ்.என்.எல்லுக்கு மாறி வருகின்றன. பிஎஸ்என்எல் வழங்கும் விலை மலிவான அதே சமயம், சூப்பரான திட்டங்களைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 18 திட்டம்: பிஎஸ்என்எல் வழங்கும் விலை மலிவான திட்டம் 2 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த பேக்க்கில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், இரண்டு நாட்களுக்கும் தலா ஒரு நாளுக்கு 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த லிமிட் முடிந்ததும், பயனர்கள் 80kbps க்கும் குறைவான வேகத்தில் அன்லிமிட்டட் டேட்டாவை அனுபவிக்க முடியும்.
ரூ.87 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: பிஸ்என்எல்லின் இந்த ரூ. 87 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டி தருகிறது. இந்த பேக்கில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வசதியை பயன்படுத்தலாம். மேலும், அன்லிமிடெட் கால்ஸ் வசதியும் உள்ளது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்ஸையும் இலவசமாக வழங்குகிறது. ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் வழங்கும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவையும் இதோடு அடக்கம்.
ரூ.99 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: பி.எஸ்.என்.எல் வழங்கும் ரூ 99 ப்ரீபெய்ட் திட்டம் வாய்ஸ் கால் மட்டும் பயன்படுத்துவோருக்கான சில சுவாரஸ்யமான நன்மைகளுடன் வருகிறது. இந்த பேக் வரம்பற்ற வாய்ஸ் கால்களை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 18 நாட்கள். இந்த பிளானில் இலவச காலர் டியூனும் உண்டு.
ரூ.118 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: ரூ.118 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் 20 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பேக் உள்ளூர் மற்றும் எஸ்டிடி நெட்வொர்க்குகளில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும்.
ரூ.147 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: ரூ.147 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் உள்ளூர் மற்றும் தேசிய ரோமிங்கிற்கு வரம்பற்ற வாய்ஸ் கால்களை இலவசமாக வழங்குகிறது. இந்த பிளானின் வேலிடிட்டி 30 நாட்கள். இந்த 30 நாட்களுக்கும் மொத்தமாக10 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். இந்த பிளான் BSNL ட்யூன்களையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் பயன்படுத்தலாம். பிஎஸ்என்எல்லின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் உண்டு. மேலும் இலவச Lystn போட்காஸ்ட் சந்தாவும் கிடைக்கும்.
ரூ.228 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: இந்த பேக் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 1 மாத வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் கால்ஸ்ம் எஸ்டிடி ரோமிங் வசதிகளை வழங்குகிறது.
ரூ.298 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: 52 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 298 க்கு கிடைக்கிறது. இந்த பேக் லோக்கல், எஸ்டிடியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 100 SMS உடன் ஒரு நாளைக்கு 1 ஜி.பி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் Eros Now பொழுதுபோக்கு சேவைகளுக்கான இலவச சந்தாவும் அடங்கும்.
ரூ. 399 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: 70 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த பிளான் வெறும் ரூ. 399 கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை 70 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த பேக் லோக்கல் மற்றும் தேசிய ரோமிங்கில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது. இது இலவச BSNL ட்யூன்கள் உடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications