சபாஷ் தமிழக அரசு! இன்ஸ்பெக்டரையே கைது செய்ய வைத்த ஆம்ஸ்ட்ராங் வழக்கு! ஸ்டாலின் விட்டுட்டாரே!
சென்னை: அகில் குமார் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒரு தொழிலதிபர். லேவாதேவி தொழில் செய்பவர். இவர் ஒரு ஃபேன்சி எண்ணை வாங்கி அதாவது ஒரே எண்ணில் வரக்கூடிய ஒரு மொபைல் நம்பரை வாங்கி மொட்டை கிருஷ்ணன் என்ற ஒரு நபருக்கு ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்,பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5, அன்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மொட்டை கிருஷ்ணனிடமும் விசாரணை நடக்கிறது. அப்போது தனிப்படையில் இருந்த இன்ஸ்பெக்டர் புகாரி தொலைபேசி எண்ணை வாங்கிக் கொடுத்த அகில்குமாரிடம் விசாரணை நடத்தச் செல்கிறார். அகில்குமார் நல்ல வசதியாக இருப்பதை பார்த்ததும் புகாரிக்கு வேறு மாதிரி திட்டம் வருகிறது.
10 வருடங்களுக்கு முன்பு சிம் வாங்கிக் கொடுத்ததற்காக ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உங்களை சேர்த்துவிடுவேன் அதற்கான அதிகாரம் என்னிடம் இருக்கிறது என்று அகில்குமாரை மிரட்டுகிறார். அவரும் பயந்து போய் பணத்தை கொடுத்திருக்கிறார். புகாரியும், வழக்கில் அகில் குமார் பெயரை சேர்க்கவில்லை.
பிறகு எப்போதெல்லாம் பணம் தேவையோ அப்போதெல்லாம் பணத்தை வாங்கி பையில் போட்டபடி இருந்துள்ளார் புகாரி. தவெக ஆட்சி வந்ததும் அகில் குமாருக்கு தைரியம் வந்துள்ளது. புகாரி போன் செய்தால் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் புகாரி அகில் குமார் வீட்டுக்கே போய் உடனடியாக 5 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லை எனில் உன்னை இப்போதே மெத்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்து விடுவேன் என்று தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய பவுடர் போன்ற ஒரு கவரை எடுத்து காண்பித்து மிரட்டியதுடன் அவருடன் அழைத்து வந்த மூன்று காவலர்களை கொண்டு வீட்டில் சோதனை செய்தாராம்.
என் மீது எந்த தவறும் இல்லை என அகில் குமார் கெஞ்சியதற்கு நீ பணம் கொடுக்கவில்லை என்றால் போதை கேஸ் சேர்ந்துவிடும் என மிரட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில் குமார் புகார் அளித்த நிலையில், சென்னை மாநகர ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் விசாரணை ஆரம்பித்தது.
அதில், புகாரி செய்த தில்லுமுல்லுகள் தெரியவந்ததால், அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த வேளச்சேரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்சிட்டிவான ஒரு கேஸில் தனிப்படையினர் இஷ்டத்திற்கு பண வேட்டையாடியுள்ளனர். இது தவிர சில என்கவுண்டர்களும் அரங்கேறின. இதையெல்லாம், அப்போது உள்துறையை கையில் வைத்திருந்த முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்ற குரல்கள் இப்போது எழுகின்றன. இன்ஸ்பெக்டரையே கைது செய்திருப்பதால் முதல்வர் விஜய் மற்றும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இந்த விஷயத்தில் மிகவும் சீரியஸ் காட்டுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இன்னும் அதிகம் பேர் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்த்தால், விக்ரம்-வேதா திரைப்படம் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.


Click it and Unblock the Notifications
