Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயின் தவெக கொடிக்கு சிக்கல்? தேர்தல் ஆணையத்துக்கே போன பகுஜன் சமாஜ் கட்சி.. என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை விஜய் பயன்படுத்தியிருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இதற்கு விஜய் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நேரடி அரசியலில் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் சமீபத்தில் கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை அறிமுகம் செய்தார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்து கட்சி பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி கட்சியின் கொடி வரை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

vijay bahujan samaj party tvk

விரைவில், கட்சியின் மாநில மாநாடு ஒன்றையும் நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் விஜயின் கட்சிக் கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ள யானை, எங்கள் கட்சிக் கொடியின் அடையாளம் என்றும் எனவே அதனை விஜய் தனது கொடியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் அதுபற்றி தமிழக வெற்றிக் கழகம் பதில் எதுவும் கூறாமல் இருந்தது.

இந்த நிலையில், அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்ட விரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து குழப்பங்களுக்கு தீர்வு காணும்படி தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

vijay bahujan samaj party tvk

வணக்கம். நான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலக செயலாளராக பணியாற்றி வருகிறேன். எங்களுடைய பகுஜன் சமாஜ் கட்சியானது நமது தேசத்தின் அரசமைப்பு தந்தை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையும், வாக்குகளையும் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாகும்.

எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும் தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். நீலக் கொடியும் யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும். யானை சின்னமானது பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும் யானை சின்னத்திற்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வு பூர்வமான வரலாற்று உறவு உள்ளது.

தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் அவர்கள், தனது கொடியை அறிமுகம் செய்திருந்தார். அதில் எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம் பெற்றுள்ளது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் அது குறித்து எந்த பதிலும், நடவடிக்கையும் நடிகர் விஜய் எடுக்காமல் இருக்கிறார்.

அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்ட விரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்தம் கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க தாங்கள் வழி செய்ய வேண்டும். இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் என்ன மாதிரியான முடிவை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மத்தியில் மட்டும் இன்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+