பழிக்கு பழி..சரிந்த ஆற்காடு சுரேஷ்! காத்திருந்து கருவறுத்த தம்பி? ஆம்ஸ்ட்ராங்க் கொலை.. பகீர் பின்னணி
சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி இந்த வழக்கில் சரண்டர் ஆகியிருக்கும் நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட அதே பேர்ட்டனில் ஆம்ஸ்ட்ராங்கும் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், நேற்று பெரம்பூர் பகுதியில் தான் வசிக்கும் வீட்டு அருகே இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். மூன்று இருசக்கர வாகனங்கள் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையி ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக எட்டு பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கின்றனர். தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவத்தை அடுத்து பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பல பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர் உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருவதால் அங்கும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறுகின்றனர். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரோட்டா கடையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் பயங்கரமான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொலையானவர் புளியந்தோப்பைச் சேர்ந்த மாதவன் என்பதும் அவர் மீது பல காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. முன்னதாக ஒரு கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு ஆற்காடு சுரேஷ் அவரது நண்பரான மாதவனுடன் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்கு உணவருந்த வந்தார். அப்போது ஆற்காடு சுரேஷை சூழ்ந்த மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டிக் கொன்றது.
இதனை தடுக்க முயன்ற போது மாதவனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக பிரமுகரான ஜோகன் கென்னடி உள்ளிட்ட 1ஃ பேர் கைது செய்யப்பட்டனர். அதில் எட்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காயமடைந்த மாதவன் பரோட்டா கடைக்கு சாப்பிட வந்த போது தான் கொலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு மாதவன் சாட்சியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆற்காடு சுரேஷின் கொலையும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலையும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது. ஆயுதம் இல்லாமல் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த ஆர்ம்ஸ்ட்ரங்கை மர்ம கும்ப கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டி இருக்கிறது. இதே போல் தான் சாப்பிட சென்ற ஆற்காடு சுரேஷும் மர்ம கும்ப கும்பலால் சுற்றி வளைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எட்டு பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் உடல் முழுவதும் 30க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் மிக ஆழமாக பதிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் வழக்கில் ஆர்ம்ஸ்ட்ராங் பின்னணியில் இருந்து செயல்பட்டதாகவும் இதனால் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக உளவுத்துறை காவல்துறையை எச்சரித்ததாகவும் காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங்குக்கு இந்த தகவலை சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியாக பழிக்குப் பழி கொலை சம்பவங்களால் தலைநகர் சென்னை மீண்டும் கிரைம் நகரமாக மாறி இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் சென்னை வாசிகள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications