பிடி அரசகுமார் மீது குண்டர் சட்டம்.. மனைவி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பி.டி.அரசகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது பற்றி தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி, ரூ.100 கோடி மோசடி செய்ததாக கைதான பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பி.டி.அரசகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்த உத்தரவை எதிர்த்து அவரது மனைவி கோகிலா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

BT Arasakumar Goondas Act Case

சென்னை சாலிகிராமத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்த பி.டி. அரசகுமார், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP/CMDA அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், உறுதியளித்தபடி எந்த அனுமதியையும் பெற்றுத் தராததுடன், பெற்ற பணத்தையும் திருப்பி வழங்காமல், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 59 தனியார் பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த 59 பள்ளிகளின் நிர்வாகம் அளித்துள்ள புகார்களில் மட்டும் 7 கோடியே 34 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விசாரணையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலமாக பல கோடி ரூபாய் பெறப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அரசகுமாரின் 24 வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் எங்கெங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னை காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ச்சியாக பல்வேறு தனியார் பள்ளிகள் அரசகுமார் மீது புகார் அளித்து வரும் நிலையில் அரகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பி.டி.அரசகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்த உத்தரவை எதிர்த்து அவரது மனைவி கோகிலா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+