சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: திமுக ஹீரோ; பாஜக காமெடியன்; எங்களுடன் மோதும் தகுதி அதிமுகவுக்கே இல்லை -பி.டி.அரசக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமியும், கு.க.செல்வமும் சர்க்கஸ் காட்டி வருவதாகவும் அது மக்களிடம் எடுபடாது எனவும் கூறுகிறார் பி.டி.அரசகுமார்.

பாஜகவில் மாநில துணைத் தலைவராக பதவி வகித்த இவர் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் ஐக்கியமானவர் இவர்.

bt arasakumar says, tamilnadu bjp shows circus to people

இந்நிலையில் ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது;

கேள்வி: பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் நீங்கள், இங்கு உங்கள் பணிகள் எப்படி செல்கின்றன?

பதில்: நான் ஏற்கனவே திமுக காரன், 1995-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை திமுகவில் புதுக்கோட்டை மாவட்ட இலக்கிய அணி செயலாளராக இருந்திருக்கிறேன். பிறகு தனிக்கட்சி தொடங்கி பாஜகவில் இணைந்து மீண்டும் தாய் வீட்டிற்கே வந்துவிட்டேன். இங்கு நல்ல முறையில் கட்சிப் பணிகளை கவனித்து வருகிறேன். கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விராலிமலையில் மிகப்பெரிய இணைப்பு விழா நடத்தி பத்தாயிரம் பேரை திமுகவில் இணைத்திருப்பேன். இந்த விழாவுக்காக ஏப்ரல் 5-ம் தேதி தளபதியிடம் தேதி வாங்கி ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கொரோனா விவகாரம் வந்துவிட்டது.

கேள்வி: விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறீர்களாமே..?

பதில்: தலைவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு கட்டுப்படுவேன். மேலும், இதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.

கேள்வி: வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றோர் திமுக மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?

பதில்: அவர்கள் இரண்டுபேரும் சர்க்கஸ் காட்டுகிறார்கள். வி.பி.துரைசாமியும், கு.க.செல்வமும் காட்டும் சர்க்கஸ் மக்களிடம் எடுபடாது. இவர்கள் இரண்டுபேருமே ரியல் திமுககாரர்கள் கிடையாது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இரண்டு பேருமே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள் தான். ரீல் திமுகவினரை தான் பாஜக இழுக்க முடியுமே தவிர ரியல் திமுகவினரை இழுக்க முடியாது. இப்போது என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் நான் நேரடியாக திமுகவிலிருந்து பாஜகவுக்கு செல்லவில்லை. தனிக்கட்சி நடத்தி வந்த நான் அதை கலைத்துவிட்டு அங்கு சென்றேன். ரியல் திமுககாரனாகிய என்னால் அங்கு இருக்க முடியவில்லை, தாய் கழகத்திற்கே வந்துவிட்டேன்.

bt arasakumar says, tamilnadu bjp shows circus to people

கேள்வி: பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் செல்வது உறுதி என எல்.முருகன் கூறி வருகிறார், அது சாத்தியமா?

பதில்: ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இதைத்தானே சொல்கிறார்கள், சொல்லிவிட்டு போகட்டும். உண்மையான மக்கள் ஆதரவு இருந்தால் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக வெற்றியை ஈட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

குடும்ப பின்னணி.. புதிய இந்தியா.. தோனிக்கு மோடி எழுதிய கடிதம்.. இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா?குடும்ப பின்னணி.. புதிய இந்தியா.. தோனிக்கு மோடி எழுதிய கடிதம்.. இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா?

கேள்வி: திமுக-பாஜக இடையே தான் போட்டி என வி.பி.துரைசாமி கூறியுள்ளாரே, அப்படியா?

பதில்: ஒரு சினிமா என்றால் வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் இடையே சண்டை நடந்தால் அது நல்லா இருக்கும், மக்கள் ரசித்து பார்ப்பார்கள். இதே காமெடியனுக்கும் கதாநாயகனுக்கும் சண்டைக்காட்சி வைத்தால் அது மக்கள் வரவேற்பை பெறாது. திமுக கதாநாயகனை போன்றது. என்னைக் கேட்டால் திமுகவுடன் போட்டிபோடும் தகுதி தற்போதைய நிலவரப்படி அதிமுகவுக்கே கிடையாது. திமுக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என மக்கள் ஒருமித்த முடிவெடுத்துவிட்டார்கள்.

English summary
bt arasakumar says, tamilnadu bjp shows circus to people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X