மதுரை மக்கள் பெரிதும் எதிர்பார்த்த.. கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஜூன் மாதம் திறப்பு! பிடிஆர் அறிவிப்பு
மதுரையில் கலைஞர் நூலகம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் வெளியிட்டுள்ளார்.
சென்னை: இன்று தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், இந்தப் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இதில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்
இன்று திமுக அரசு தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே. இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இருந்தது.. காலை 10 மணிக்குத் தமிழ்நாடு சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்..

அமைச்சர் பிடிஆர்
இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு நூலகம் ஒன்று பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 3.50 லட்சம் புத்தகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்டார்.

மதுரை நூலகம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித்தேர்வு எழுதும் இளைஞர்கள். இல்லத்தரசிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், இந்த நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு வசதிகள்
குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான நூலகச்சூழல், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான இணைய வசதியுடன் கூடிய சிறப்புப்பிரிவு, பார்வைத்திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள், குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்குகள், தென்தமிழகத்தின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் கலை அரங்கம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் படைப்புகள், பேச்சுகள் இடம்பெறும் வகையில் எழிலார்ந்த கூடம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இம்மாபெரும் நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

எப்போது திறக்கப்படும்
முதற்கட்டமாக, இந்த நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3. 50 லட்சம் நூல்கள் இடம்பெறும்.தன்தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழப்போகும் இந்நூலகம், கருணாநிதியின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில், "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என்ற பெயரைத்தாங்கி, வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும்" என்றார்.

புத்தக கண்காட்சி
தொடர்ந்து புத்தகக் கண்காட்சி குறித்துப் பேசிய அவர், "அறிவைப் பரவலாக்கிக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே சமூகநீதித் தத்துவம் முழுமை அடைகிறது. அந்த அடிப்படையில் தலைநகர் சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும் ஐந்து இலக்கியத் திருவிழாக்களும் வெற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் நிதியுடன் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சர்வதேச புத்தகக் கண்காட்சி
முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியினை 24 நாடுகளின் பங்கேற்புடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications