12 லட்சம் ஓகே.. 13 முதல் 25 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் யார் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?
சென்னை: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யதுள்ள 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி விலக்கிற்கான வருவாய் வரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நிலையான வரிக்கழிவுகள் என 12லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான வரி கிடையாது. ஆனால் 14 லட்சம், 15 லட்சம், 20 லட்சம் என சம்பளம் வாங்குவோர் யார் யார், இனி எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
மத்திய அரசு இதுவரை இல்லாத ஒரு அதிரடி அறிவிப்பாக ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி ஒரு ரூபாய் கூட இல்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் சம்பளம் வாங்குவோர் மற்றும் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரியாக ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டியது இல்லை.. அதேநேரம் சம்பளமாகவோ அல்லது தொழில் செய்தோ கிடைக்கும் வருமானத்திற்குத்தான் வரி கிடையாது..

இதில் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், 12 லட்சம் பிளஸ் வரிக்கழிவு 75 ஆயிரம் என 12 லட்சத்து 75 ஆயிரம் வரை வரியில்லை என்றாலும், 13 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி உறுதியாக இருக்கும். அதன்பிறகு 13 லட்சம், 14 லட்சம், 15 லட்சம், 16 லட்சம் என சம்பளம் அல்லது வருமானம் ஈட்டுவோர் எவ்வளவு வரி கட்ட வேண்டும். சம்பாதிக்கும் 12லட்சத்திற்கு மேல் தான் வரி வருமா அல்லது எதில் இருந்து வரி ஆரம்பிக்கும் என்பது குறித்து தெளிவாக பார்ப்போம்.
13 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி எவ்வளவு: பொதுவாக 12 லட்சம் வரை புதிய வருமான வரிவிதிப்பு முறையில் வரி இல்லை என்ற உடன், ஆஹா 12லட்சம் வரை வரியில்லை.. அப்படி என்றால் 13வது லட்சத்திற்குத்தான் வரி வருமான என்றால்.. அது தவறு.. புதிய வருமான வரி விதிப்பு முறையை பொறுத்தவரை 4லட்சத்தை தாண்டினாலே வரி ஆரம்பித்துவிடும். அதன்படி 4 லட்சம் வரை வருமான வரி இல்லை.. 4 முதல் 8 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி இருக்கும்.. அத்துடன் அடுத்த 8 லட்சம் முதல் 12 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீதம் வருமான வரி இருக்கும். அதேநேரம் 13 வது லட்சத்திற்கு அதாவது அடுத்த ஒரு லட்சத்திற்கு 15 சதவீத வரி இருக்கும். ஒட்டுமொத்தமாக 13 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி என்று பார்த்தால் 75 ஆயிரம் ஆக இருதுக்கும். அதாவது 12 லட்சத்து 75 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு வரி இல்லை என்கிற நிலையில், அதைவிட கூடுதலாக 25 வாங்கினால், அதாவது 13 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு 75 ஆயிரம் வருமான வரி கட்ட வேண்டியது வரும்.
14 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி எவ்வளவு: அடுத்ததாக 14 லட்சம் உள்ளவர்களுக்கு பார்ப்போம். 13 லட்சம் வாங்குவோருக்கு எப்படியோ அதே மாதிரி தான் இவர்களுக்கு வரி விதிப்பு இருக்கும். அதன்படி 4 லட்சம் வரை வருமான வரி இல்லை.. 4 முதல் 8 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி இருக்கும்.. அத்துடன் அடுத்த 8லட்சம் முதல் 12 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீதம் வருமான வரி இருக்கும். எனினும் 12 முதல் 14 லட்சம் வரை உள்ள 2 லட்சம் வருமானத்திற்கு 15 சதவீத வரி இருக்கும். ஒட்டுமொத்தமாக 1 4லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 90000 ரூபாய் வருமான வரி விதிக்கப்படும்.
15 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி எவ்வளவு: 15 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு, முதல் 4 லட்சம் வரை வருமான வரி இல்லை.. 4 முதல் 8 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி இருக்கும்.. அத்துடன் அடுத்த 8லட்சம் முதல் 12 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீதம் வருமான வரி இருக்கும். எனினும் 12 முதல் 14 லட்சம் வரை உள்ள 3 லட்சம் வருமானத்திற்கு 15 சதவீத வரி இருக்கும். ஒட்டுமொத்தமாக 15 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 1,05,000 ரூபாய் வருமான வரியாக இருக்கும்.
16 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி எவ்வளவு: 16 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு, முதல் 4 லட்சம் வரை வருமான வரி இல்லை.. 4 முதல் 8 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி இருக்கும்.. அத்துடன் அடுத்த 8லட்சம் முதல் 12 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீதம் வருமான வரி இருக்கும். எனினும் 12 முதல் 16 லட்சம் வரை உள்ள 4 லட்சம் வருமானத்திற்கு 15 சதவீத வரி இருக்கும். ஒட்டுமொத்தமாக 16 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 1,20,000 ரூபாய் வருமான வரியாக இருக்கும்.
17 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி எவ்வளவு: 17 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு, முதல் 4 லட்சம் வரை வருமான வரி இல்லை.. 4 முதல் 8 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி இருக்கும்.. அதேநேரம் அடுத்த 8லட்சம் முதல் 12 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீதம் வருமான வரி இருக்கும். எனினும் 12 முதல் 16 லட்சம் வரை உள்ள 4 லட்சம் வருமானத்திற்கு 15 சதவீத வரி இருக்கும். அடுத்ததாக உள்ள 17 வது லட்சத்திற்கு 20 சதவீதம் வரி இருக்கும்.
18 முதல் 20 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரி : ஒட்டுமொத்தமாக 17 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 1,40,000 ரூபாய் வருமான வரியாக இருக்கும். 17 லட்சம் முதல் 20 லட்சம் வரை உள்ளவர்களுக்கு அவர்கள் வாங்கும் 17வது லட்சம், 18வது லட்சம், 19வது லட்சம், 20 லட்சம் என அடுத்தடுத்த லட்சங்களுக்கு 20 சதவீத வரி இருக்கும். அந்த வகையில் 18 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ஆண்டுக்கு 160000 ரூபாய் வருமான வரியாக கட்ட வேண்டும். 19 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 1.80 லட்சம் வருமான வரி கட்ட வேண்டும். 20 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 2லட்சம் வருமான வரி கட்ட வேண்டியதிருக்கும்.
21 முதல் 24 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரி: 21 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு, முதல் 4 லட்சம் வரை வருமான வரி இல்லை.. 4 முதல் 8 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி இருக்கும்.. அதேநேரம் அடுத்த 8லட்சம் முதல் 12 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீதம் வருமான வரி இருக்கும். எனினும் 12 முதல் 16 லட்சம் வரை உள்ள 4 லட்சம் வருமானத்திற்கு 15 சதவீத வரி இருக்கும். அடுத்ததாக உள்ள 17 வது லட்சம் முதல் 20 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 20 சதவீதம் வரி இருக்கும். ஆனால் அதன்பிறகு வரும் ஒவ்வொரு லட்சத்திற்கு 25 சதவீதம் வரி இருக்கும். அந்த வகையில் 21 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 2.25 லட்சம் வருமான வரி கட்ட வேண்டும். 22 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 2.50 லட்சமும், 23 லட்சம் சம்பளம் வாங்குவோர் 2.75 லட்சமும், 24 லட்சம் சம்பளம் வாங்குவோர் 3லட்சமும் வருமான வரியாக கட்ட வேண்டும்.
25 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி எவ்வளவு : 21 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு, முதல் 4 லட்சம் வரை வருமான வரி இல்லை.. 4 முதல் 8 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி இருக்கும்.. அதேநேரம் அடுத்த 8லட்சம் முதல் 12 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீதம் வருமான வரி இருக்கும். எனினும் 12 முதல் 16 லட்சம் வரை உள்ள 4 லட்சம் வருமானத்திற்கு 15 சதவீத வரி இருக்கும். அடுத்ததாக உள்ள 17 வது லட்சம் முதல் 20 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 20 சதவீதம் வரி இருக்கும். ஆனால் அதன்பிறகு 21 முதல் 24 லட்சம் வரை உள்ள 4 லட்த்திற்கு 25 சதவீதம் வரி இருக்கும். 25வது லட்சத்திற்கு 30 சதவீத வரி இருக்கும். 25 லட்சம் சம்பளம் அல்லது வருமானம் ஈட்டுவோர், ஆண்டுக்கு 3.30 லட்சம் ரூபாய் வருமான வரி கட்ட வேண்டியதிருக்கும். இந்த தகவலை சுரேஷ் என்பவர் எக்ஸ் தளத்தில் சார்ட் வடிவில் பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications