வருமானதாரர்களுக்கு ஏமாற்றம்! தனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை.. வருமான வரி சொல்வது என்ன?
சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வரி ரீதியாக சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டாலும், தனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
இதனால் புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்ற நிலை தொடரும். இதன்படி
0-4 லட்சம் ரூபாய் வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய் 5 சதவீதம்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம்
12-16 லட்சம் ரூபாய் 15 சதவீதம்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம்
20-24 லட்சம் ரூபாய் 25 சதவீதம்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்

எடுத்துக்காட்டு:
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. நீங்கள் இந்த முறையை தேர்வு செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் மாத வருமானம் ரூ. 1 லட்சம் என்றால்.. வருட வருமானம் 12 லட்சம்.
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை கடந்த பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
அதுவே நீங்கள் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது பின்வரும் ஸ்லாப் நடைமுறை ஆகும்.
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும். கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த மாற்றங்கள் இந்த ஆண்டும் தொடரும். இதில் மாற்றங்கள் இல்லை.
பழைய வரி விதிப்பு முறை:
அதுவே நீங்கள் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்து இருந்தால்.. அதில் மாற்றம் எதுவும் இன்று செய்யப்படவில்லை. நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும்.












Click it and Unblock the Notifications