பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் உடுத்தியிருந்த காஞ்சிபுரம் பட்டுப் புடவை.. பின்னணி என்ன?
சென்னை: மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் கைத்தறி நெசவு பட்டுப் புடவையை அணிந்து இருந்தார். அடர் மெஜந்தா நிற பட்டுப் புடவையை அவர் அணிந்திருந்தார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டின் சிறப்புகளில் ஒன்றான காஞ்சிப் பட்டுப் புடவை அணிந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இன்று 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடை ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் கவனம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிர்மலா சீதாராமன், பீகார் மாநிலத்தின் புகழ் பெற்ற புடவையை உடுத்தி இருந்தார். அப்போது, பீகார் சட்டப்பேரவை தேர்தல் காலம். அதனால் பீகாருக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான காஞ்சி பட்டுப் புடவையை உடுத்தி இருந்தார். தமிழ்நாட்டுக்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் கைத்தறி நெசவு பட்டுப் புடவையை உடுத்தியிருந்தார்.
இன்று, நிர்மலா சீதாராமன் அடர் மெஜந்தா நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்திருந்தார். மெஜந்தா நிற கட்டம் போட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவையில், ஊதா நிற கரை, இளம் பொன் பழுப்பு நிற டிசைன் இடம்பெற்றிருந்தது. இந்த புடவையில் ஜரிகை பயன்படுத்தப்படவில்லை. பட்டு மற்றும் நுணுக்கமான கைவினைத் திறனுக்காக புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற கைத்தறி நெசவுகளில் ஒன்றாகும்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடர் நிற கம்பளி சால்வையும், மஞ்சள் நிற ஸ்வெட்டரும் அணிந்திருந்தார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை பட்ஜெட் தாக்கலின்போது அணிந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் புடவையும் கவனம் பெறும். 2019 ஆம் ஆண்டில் தனது முதல் பட்ஜெட்டின் போது, அவர் இளஞ்சிவப்பு நிற மங்களகிரி புடவையை அணிந்திருந்தார். கடந்த ஆண்டு, பீகார் தேர்தலுக்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பீகார் மாநில பாரம்பரிய புடவையை அணிந்திருந்தார் நிர்மலா சீதாராமன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications