Budget Memes: அதுல ஒன்னும் இல்லை கிழிச்சி போட்டுரு.. மத்திய பட்ஜெட்! கலாய்த்த நெட்டிசன்கள்.. மீம்ஸ்கள்
சென்னை: 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சாமானிய மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்ததாக நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து மீம்ஸ்களை போட்டுள்ளனர். மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடும்படியாக எந்த அறிவிப்பும் இல்லை என்பதை நையாண்டியாக சொல்லும் விதமாக, "அதுல ஒன்னும் இல்லை கீழே போட்டுரு.." என்று சினிமா படத்தில் இடம் பெற்று இருந்த காட்சி ஒன்றை பகிர்ந்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகள் மிஸ் ஆகியிருந்தன. ரயில் பயணிகளுக்கு கட்டண சலுகையை பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

சாமானிய மக்களுக்கு ஏமாற்றம்
அதேபோல, வரி சலுகையும் பெரிய அளவில் இல்லை. தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் விலையை குறைக்க ஏதுவாக இறக்குமதி வரி குறைப்பை எதிர்பார்த்தனர். ஆனால் இதுபற்றிய எந்த அறிவிப்பும் இல்லை என்பது சாமானிய மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. பட்ஜெட் நேற்று வெளியான நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் மீம்ஸ்களாக தெறிக்க விட்டு வருகிறார்கள். அது பற்றிய விவரம் வருமாறு;
அதுல ஒன்னும் இல்ல கீழே போட்டுரு
மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடும்படியாக எந்த அறிவிப்பும் இல்லை என்பதை நையாண்டியாக சொல்லும் விதமாக, சினிமா படத்தில் இடம் பெற்று இருந்த காட்சி ஒன்றை பகிர்ந்து இருக்கும் நெட்டிசன்கள், அதில் வரும் டயலாக்கை மீம்ஸாக போட்டு இருக்கிறார்கள்.

அதாவது ஆர்.சுந்தரராஜன் எதிரே வரும் நபர் ஒருவரை பிடித்து லெட்டரை கையில் கொடுப்பார். அதை வாங்குபவரும் ஏதோ இருக்கு போல என்று ஆர்வத்துடன் படிக்க முயலும் பொது அதில் ஒன்னும் இல்லை.. கிழிச்சி பொட்டுரு என சொல்லிவிட்டு செல்வார். இதே அப்படியே பிதிபலித்து மீம்ஸ் கண்டெண்ட் ஆக உருவாக்கியிருக்கும் நெட்டிசன்கள் மத்திய பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்பதாக விமர்சித்து இருக்கிறார்கள்.
நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்

அதேபோல, கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சி ஒன்றை பகிர்ந்து, பட்ஜெட் பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லை.. நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட் என்று செந்தில் சொல்லும் திரப்ப்பட காட்சியை வைத்து மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளனர். இந்த மீம்ஸ் நெட்டிசன்களிடையே அதிகம் பரவி வருகிறது.
எதிர்பார்த்தது ஒன்று.. நடந்தது ஒன்று..

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது எதிர்பார்ப்பு புலி மாதிரி இருந்ததாகவும், ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடந்தது பூனை மாதிரி இருப்பதை காட்டும் வகையில் இந்த மீம்ஸ் பகிரப்பட்டு வருகிறது.
பையில் ஒன்னும் இல்ல

பட்ஜெட்டில் ஒன்னும் இல்லை என்பதை காட்டும் வகையில் இந்த மீம்ஸ்களானது பகிரப்பட்டு வருகிறது.

பட்ஜெட்டை தாண்டி எல்பிஜி கியாஸ் விலை, அதாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பேட் உயர்ந்துவிட்டது என்பதை குறிப்பிடும் வகையில் இந்த மீம்ஸ் பரவி வருகிறது. வணிக சிலிண்டர் விலை பிப்ரவரி 1 ஆம் தேதி உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications