ஒரே கல்லில் 3 மாங்காய்.. மொத்தமாக "புல்-ஸ்டாப்" வைக்க போகும் ஸ்டாலின்.. களத்தில் 3 அமைச்சர்கள்!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

திமுக தலைமையிலான புதிய தமிழ்நாடு அரசு பதவி ஏற்று 50 நாட்களே ஆகியுள்ளன. இதற்குள் திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மற்ற முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் முக்கியமான சில வாக்குறுதிகள் இனி வரும் நாட்களில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

பட்ஜெட்

பட்ஜெட்

இதில் திமுக கட்சி நீட் தடை, பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்கின்றன. வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்னும் அதை நிறைவேற்றாமல் உள்ளனர் என்று அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் நடக்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3 அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

புகார்கள்

புகார்கள்

மொத்தமாக எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கும், விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மூன்று அறிவிப்புகள் வெளியாக உள்ளனர். முதல் அறிவிப்பு பெண்களுக்கான உரிமைதொகை தொடர்பான அறிவிப்பு ஆகும். பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டு அதே மாதம் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

பிடிஆர்

பிடிஆர்

நிதி அமைச்சர் பிடிஆர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு ஒரு பக்கம் உள்ள நிலையில், இன்னொரு பக்கம் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வரும் கூட்டத்தொடரில் வெளியிடுவார் என்கிறார்கள். இந்த கோரிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அமைச்சர் ஐ பெரியசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

x

நீட்

நீட்

இந்த இரண்டு அறிவிப்புகள் போக மூன்றாவதாக நீட் தடை தொடர்பான தீர்மானம் கண்டிப்பாக தாக்கல் செய்யப்படும் என்கிறார்கள். இதற்கான வலுவான தீர்மானத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தயார் செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டிற்கான விலக்கு தொடர்பான தீர்மானம் வரும் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்கிறார்கள்.

மூன்று அறிவிப்பு

மூன்று அறிவிப்பு

மொத்தத்தில் இந்த மூன்று விதமான அறிவிப்புகளும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம். தனியாக தாக்கல் செய்யப்பட உள்ள விவசாய பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. வாக்குறுதிகள் குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

நீட்

நீட்

ஒரே கூட்டத்தொடரில் அனைத்து முக்கியமான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஐ பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய மூன்று பேர் இதற்கான பணிகளை கவனித்து வருகிறார்கள். இதில் நீட் தொடர்பான அறிவிப்பு கூட்டத்தொடரின் இறுதியில் வெளியாகலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+