அமெரிக்காவில் சோகம் மளமளவென இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு.. சிக்கிய 150+ பேர்.. 50 பேர் பலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை 50ஐ தாண்டும் வாய்ப்பு உள்ளதாக மீட்பு பணியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்றாகும். இங்கு கட்டுமான துறை, ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்க ரியல் எஸ்டேட் துறை பொதுவாக உலக அளவில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்க கூடியது.

இந்த நிலையில் திடீரென நேற்று நள்ளிரவில் மியாமி சர்ப்சைட் பகுதியில் உள்ள 12 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது.

எப்படி

எப்படி

நான்கு 12 மாடி குடியிருப்புகள் சேர்ந்து "சி" வடிவில் கட்டப்பட்டு இருந்த இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி 12 மாடி குடியிருப்பு அப்படியே இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது. மொத்தம் இதில் 75 குடியிருப்புகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

மீட்பு

மீட்பு

அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய குடியிருப்பு இடிபாடு இது என்று கூறப்படுகிறது. இந்த குடியிருப்பில் 180க்கும் மேற்பட்டோர் சம்பவம் நடந்த நேரத்தில் உள்ளே இருந்துள்ளனர். இதில் 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகிவிட்டார். இன்னும் பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

போராட்டம்

போராட்டம்

உள்ளே இன்னும் 140க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 50ஐ தாண்டலாம் என்று அஞ்சப்படுகிறது. பல்வேறு மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், போலீசார் இந்த மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

 எப்படி நடந்தது?

எப்படி நடந்தது?

மியாமி பகுதியில் உள்ள இந்த கட்டிடம் 1981ல் கட்டப்பட்டது. பழமையான கட்டிடம் என்பது ஒரு காரணம். இன்னொரு பக்கம் அருகிலேயே நிறைய கட்டுமானம் நடந்தது. இதற்காக அருகில் தோண்டப்பட்ட குழிகளினால், இந்த கட்டிடத்தின் அஸ்திவாரம் வலுவிழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+