மாடர்ன் டிரஸ் பெண் ரோட்டில் ஷாக்! யாரை வேணும்னாலும் கூப்பிடு.. காஸ்ட்லி ராயல் என்ஃபீல்டு கதி பாருங்க
சென்னை: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு சாதாரண டிராபிக் பிரச்சனை மிகப்பெரிய களேபரமாக போய்விட்டது.. இளம்பெண்ணின் கட்டுக்கடங்காத ஆத்திரத்தால் பெரும் வன்முறையாக மாறிய சம்பவம் சமூக வலைதளங்களில் அதிரவைக்கும் வீடியோவாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள்.. அப்படி என்ன நடந்தது?
ஜெய்ப்பூர் நகர் எப்போதுமே பரபரப்பாக பிஸியாக காணப்படும்.. நேற்றைய தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.. எனினும் ஒரு இளைஞர் தனது காஸ்ட்லி ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் டிராபிக்கில் மெல்ல சென்று கொண்டிருந்தார்.

ஜெய்ப்பூர் ரோடு
அப்போது , அங்கு ஸ்கூட்டரில் வந்த இளம்பெண்ணின் டூவீலர் மீது, அந்த பைக்கின் ஒரு பகுதி லேசாக உரசியதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தை சாதாரணமாகப் பேசித் தீர்த்திருக்கலாம்.. அல்லது மன்னிப்பு கேட்டு கடந்து போயிருக்கலாம்.. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அந்த இடமே ஒரு போர்க்களம் போல மாறியது.
ராயல் என்பீல்டு வாகனம் உரசிய அடுத்த நொடியே அந்தப் பெண் தனது ஸ்கூட்டரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அந்த இளைஞருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காஸ்ட்லி ராயல் என்பீல்டு பைக்
அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயன்றும், அவர் எதற்கும் செவிசாய்க்காமல் கட்டுக்கடங்காத கோபத்தில் கத்த தொடங்கினார். பிரச்சனை பெரிதாக வெடிக்கவும், ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர், "இருங்க போலீஸை கூப்பிடறேன் என்று எச்சரித்தார்..
ஆனால் அந்தப் பெண் சற்றும் அஞ்சாமல் பகிரங்கமாகச் சவால் விட்டார். "நீ யாரை வேண்டுமானாலும் கூப்பிடு, போலீஸை வேண்டுமானாலும் கூப்பிட்டுக்கோ... என்னை ஒன்றும் செய்ய முடியாது, எனக்கு எந்த கவலையும் இல்லை" என்று ஆக்ரோஷமாக சொல்லியபடியே ரகளையில் ஈடுபட்டார்.
ஹெல்மெட்டால் உடைத்து நாசம்
ஆத்திரம் தலைக்கேறிய அந்தப் பெண், தான் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டை எடுத்து அந்த ராயல் என்ஃபீல்டு பைக்கின் மீது ஓங்கி அடித்தார். அத்துடன் ஆத்திரம் தீராத அவர், ரோட்டோரம் கிடந்த ஒரு பெரிய செங்கல்லை தூக்கிக்கொண்டு வந்து, பைக்கின் முன்பக்கம் உள்ள ஹெட்வைலட்டை உடைத்தார்.. பிறகு வேகமானி என்று சொல்லப்படும் Speedometer-ஐ சரமாரியாக அடித்து நொறுக்கினார்.
இதையெல்லாம் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.. அதுமட்டுமல்ல, அந்த ராயல் என்பீல்டு பைக் சின்னாபின்னமானது.. ஆனால் அந்த இளைஞர் அமைதியாகவே நின்றிருந்தார்.. எவ்வித ஆக்ரோஷத்தையும் காட்டாமல், ஆந்த பெண்ணின் செயல்களை பார்த்தபடி நின்றது அங்கிருந்தவர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.
அதிர்ச்சி வீடியோ வைரல்
பைக்கை இளம்பெண் அடித்து நொறுக்கியதை சிலர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.. இந்த வீடியோ வைரலாகவும், ஜெய்ப்பூர் போலீசார் தற்போது இதில் தலையிட்டுள்ளனர். வீடியோவை ஆதாரமாகக் கொண்டு சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சமூக வலைதளங்களில் இந்தப் பெண்ணின் செயலுக்குக் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. "ஒரு சின்ன சாதாரண சண்டைக்கு பொதுச் சொத்தையும், அடுத்தவர் உடமையையும் இப்படிச் சேதப்படுத்துவது முறையல்ல, மாடர்ன் உடையணிந்தால் மட்டும் போதாது, பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறையும் தெரிந்திருக்க வேண்டும்" என்றெல்லாம் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம், இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், சட்டம் தன் கையில் இருப்பதை உணர்ந்து பொறுமை காத்த அந்த இளைஞருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications