பல ஒன்வே பாதைகள்.. சென்னை போக்குவரத்தில் பெரிய அளவில் செய்யப்பட்ட மாற்றங்கள்.. புது ரூட் விவரம்
சென்னை: மெட்ரோ பணிகளை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்த்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மெட்ரோ பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. 2ம் கட்ட கட்டுமான பணிகள் தற்போது நடைபெற தொடங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ள நிலையில் போக்குவரத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. முக்கியமான ஓஎம்ஆர் சாலையில் இருந்த 4 டோல்கேட்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் இனி சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்க உள்ளன. இதை முன்னிட்டு இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தை இது இனி எளிதாக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அறிக்கை
மெட்ரோ பணிகளை தொடர்ந்து செய்யப்படும் புதிய போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை x 80 அடி சாலை வரை நடைபெற இருப்பதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் 10.09.2021 முதல் ஓராண்டிற்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
1. போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு, போக்குவரத்தில் மாற்றம் ஏதுமில்லை.

கோடம்பாக்கம்
2. கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் / கோயம்பேடு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று நேராக P.T. ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை / வன்னியர் சாலை வழியாக ஆற்காடு சாலையை அடையலாம்.
3. கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்புக்கு செல்லலாம்.

வடபழனி மார்க்கம்
4. வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள்
துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக்கூடாது, மாறாக பவா ஹ சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.
5. அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

அம்பேத்கர் சாலை
7. வாகனங்கள் அம்பேத்கர் சாலை x 2வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து, 2வது அவென்யூ சாலை x 100 அடி சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் 2வது அவென்யூ சாலை x 100
சாலை சந்திப்பிலிருந்து, அம்பேத்கர் சாலை x 2வது அவென்யூ சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை (ஒருவழி பாதை).
8. வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் நகர் காவல் நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுவார்கள்.அசோக் நகர் நகர் காவல் நிலைய சந்திப்பில் இருந்து பவர் ஹவுஸ் சந்திப்பு செல்ல அனுமதியில்லை (ஒருவழி பாதை).
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications