தமிழகத்திலிருந்து புதுவைக்கு இன்று முதல் பேருந்து சேவை.. என்னென்ன தளர்வுகள் முழு விவரம்!
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில் இன்று முதல் தமிழகத்திலிருந்து புதுவைக்கு பேருந்து சேவைகள் தொடங்கப்படுகின்றன. மாநிலங்களுக்கிடையிலான பேருந்து சேவையில் தடை நீடித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த இரு மாதங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்றின் அடிப்படையில் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வாரம் ஊரடங்கு தளர்வின் போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு கொண்டு வந்தது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது. இது ஜூலை 19 ஆம் தேதி வரை நீடிக்கும். இன்றைய தினம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தனை நாட்கள் வரை இரவு 8 மணி வரை இருந்த கடை திறப்பு தற்போது கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பேக்கரிகள்
அது போல் ஹோட்டல்கள்,பேக்கரிகள், தேனீர் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து புதுவைக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனினும் மாநிலங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தடை நீடிக்கிறது.

கல்லூரிகள்
அது போல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை. தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று காலை 5.30 முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு
புதுவையில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அது போல் தமிழகத்திலும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்த ஊரடங்கு தளர்வுகளில் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications