பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை நிபுணருமான பிஆர் சுந்தர் கைது.. பாலியல் புகாரில் நடவடிக்கை!
சென்னை: பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை நிபுணருமான பி.ஆர்.சுந்தர், தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அந்தப் பெண் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கடந்த மாதம் 1 ஆம் தேதி தன்னை பி.ஆர்.சுந்தரின் அலுவலகத்தில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி மங்கையர்கரசி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், பெங்களூரில் இருந்த பி. ஆர் சுந்தர் மற்றும் அவரது மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பி.ஆர்.சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பி.ஆர் சுந்தர், தனக்கும் எஸ்.பி அன்புச்செழியன் என்பவருக்கும் சொத்து தகராறு இருப்பதாகவும் , அவருடைய தூண்டுதலின் பேரில் தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
