கரூரே கதிகலங்கி கிடக்க.. ஏற்காட்டுக்கு எஸ்கேப்பான புஸ்ஸி ஆனந்த்? ஸ்கெட்ச் போட்ட போலீஸ்.. சிக்குவாரா?
சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறையினர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே ஏற்காட்டில் புஸ்ஸி ஆனந்த் பதுங்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் நாட்டையே உலுக்கியது. கடந்த மாதம் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் நடந்த இந்த மக்கள் சந்திப்பில் விஜய்யைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
விஜய் தாமதமாக வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல்
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஈடுபட்ட த.வெ.க. நிர்வாகிகள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் முக்கிய குற்றச்சாட்டுகள் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் மதியழகனும் கரூர் மாநகர நிர்வாகி பவுன்ராஜும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் அவர்கள் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிர்மல் குமார் தலைமறைவு
இந்நிலையில் முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இன்னும் போலீசாரால் கைது செய்யப்படவில்லை. அவர்கள் இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், காவல்துறை விசாரணையை வேகப்படுத்தியுள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
3 தனிப்படைகள்
மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்பேரில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகள் மாநிலம் முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களின் இருப்பிடங்கள் குறித்து பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. த.வெ.க. நிர்வாகம் கூட்ட நெரிசலுக்கான பொறுப்பை நிராகரிக்கும் நிலையில், காவல்துறை மற்றும் அரசியல் கட்சிகள் இதற்கான முழுமையான காரணத்தை வெளிக்கொணர வலியுறுத்தி வருகின்றன.
புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டால் இந்த வழக்கின் விசாரணை மேலும் முக்கிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தற்போது தமிழக அரசியலின் சூடான விவாதமாக மாறியுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் தீர்மானங்கள் ஆகியவை த.வெ.க. கட்சிக்கும் அதன் தலைவரான விஜய்க்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு நீதிமன்றங்கள் விடுமுறையில் உள்ளன.
ஏற்காட்டில் பதுங்கல்
இதனால் இருவரும் முன் ஜாமீன் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாக சிறையில் அடைக்கப்பட உள்ளனர். மேலும் அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி இருக்கும் நிலையில் அவர் ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் தங்கி இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. கரூர் விபத்து நிகழ்ந்த அன்று புஸ்ஸி ஆனந்த், விஜய் உடன் சென்னை சென்றார். அதற்குப் பிறகு அவர் தலைமறைவானதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஞாயிறன்று காலை சாலை மார்க்கமாக சேலம் சென்ற ஆனந்த், பின்னர் ஏற்காடு சென்றார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
-
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா












Click it and Unblock the Notifications