தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்த் அறை வாசலில் தொங்கும் சிவப்பு துணி.. என்ன காரணமா இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அறையின் முன்பாக சிவப்பு துணி ஒன்று கட்டவிடப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் பிரச்சனை, மேகதாது அணை விவகாரம், விவசாயிகள் பிரச்சனை என்று அடுத்தடுத்து அமைச்சர் ஆனந்த்-க்கு பிரச்சனை எழுந்ததால், அவரின் இஷ்த தெய்வ கோயிலில் இருந்து சிவப்பு துணி கொண்டு வரப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.

தவெகவில் முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர்கள் பலரும் ஜோதிடம், மாந்தீரீகம் உள்ளிட்ட விஷயங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விஜய் வேஷ்டி, சட்டையில் வருவது, கடலை பார்த்தவாறு அலுவலகத்தை மாற்றுவது, நல்ல நேரத்தில் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வருவது, திட்டங்கள் அறிவிப்புக்கு கூட சில நேரம் பார்ப்பது என்று எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

Bussy Anand

இதன் காரணமாக தவெகவில் ரிக்கி ராதன் பண்டிட்-க்கு மரியாதை உச்சத்தில் இருக்கிறது. விஜய்யை போலவே அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் கடவுள் நம்பிக்கை கொண்டவர். எப்போதும் அமைச்சர் ஆனந்த் நெற்றியில் விபூதி இல்லாமல் இருக்காது. அதேபோல் முக்கியமான நாட்களன்று புஸ்ஸி ஆனந்த் அம்மன் கோயிலுக்கு செல்வது வழக்கம்.

தற்போது நீர்வளத்துறையில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுப்பது, மேகதாது அணை விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, நீர் தேக்க திட்டங்கள் என்று வருவதால், அமைச்சர் ஆனந்த் திண்டாடி வருகிறார். சட்டசபையிலும் ஆனந்த் பக்கம் இன்னும் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்காமல் இருக்கின்றனர்.

அப்படி இருந்தாலும் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு கூட ஆனந்தால் பதில் அளிக்க முடியவில்லை. எந்த கேள்வி கேட்டாலும் சிரித்தவாறு அங்கிருந்து எஸ்கேப்பாகி ஓடிவிடுகிறார். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்த் அறையின் வாசலில் சிவப்பு துணி ஒன்று தொடங்கவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே இந்த சிவப்பு துணி விவகாரம் தலைமைச் செயலகத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

எதற்காக ஆனந்த் அறை முன்பாக சிவப்பு துணி தொடங்கவிடப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளன. இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்த போது, காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது விவகாரம், மேட்டூர் அணை நிரம்பாதது, விவசாயிகள் பிரச்சனை என்று தொடர்ந்து வருகிறது.

இதனால் பிரச்சனைகளை சரி செய்ய தனது ஆஸ்தான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து மந்திரித்து சிறப்பு பூஜை செய்து வாங்கி வந்து தொங்கவிட்டுள்ளதாக சொல்லுகின்றனர். இதனை கேட்ட போது, 2 ஆயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரி, எப்படி சின்ன எலுமிச்சை பழத்தை தொடங்கவிடுவதால் ஓடும் என்ற விவேக் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+