மக்களே உதவி செய்யுங்க.. திடீரென அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சொன்ன வார்த்தை.. மொத்தம் ரூ.500 கோடியாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் கிராம வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் ரூ.500 கோடி திட்டத்தை கூறி பொதுமக்களிடம் முக்கிய உதவியை கேட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்தின் இந்த திடீர் கோரிக்கையின் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

bussy-anand-urges-to-people-to-join-rs-500-crore-water-body-restoration-drive-ahead-of-north-east-mo

தமிழக முதல்வர் விஜய் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இவர் கிராம வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறது. விரைவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சமயத்தில் சென்னை, டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் என பல இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு இப்போதே தயாராகி வருகிறது.

அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில், 'விக்சித் பாரத்' கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் இப்பணிகள் ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

கிராமப்புற நீர் ஆதாரங்களை வலுப்படுத்தவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும்மொத்தம் 10,185 வரத்து கால்வாய்கள் மற்றும் ஏரிகள், குளங்கள், ஊரணிகள் உள்ளிட்ட 809 நீர்நிலைகளை சீரமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், குப்பைகளை அகற்றப்பட உள்ளது. இதுதவிர மழைநீர் தடையின்றி பாய்வதை உறுதிசெய்ய வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட உள்ளது.

இந்த பணியில் பொதுமக்கள் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்று கிராம வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். இந்த பணிகளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் சீரமைக்கப்பட்ட நீர்நிலைகளை நீண்ட காலத்திற்குத் திறம்பட பராமரிப்பதை உறுதி செய்வதில் பொதுமக்களின் பங்கேற்பு மிக முக்கியமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முறையாகப் பராமரிக்கப்படாத கால்வாய்களில் நீர் தங்கும்போது தான் அது விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாகிறது. இதனால் தான் இந்த திட்டம் நாளை தமிழக அரசு சார்பில் முன்னேடுக்கப்பட உள்ளது.

இந்த திட்டம் சிறப்பாக நடைபெறும் பட்சத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் குடியிருப்புகள், வயல்களில் வெள்ளம் சூழ்வது தடுக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் உயர வழி ஏற்படும். நீர் நிலைகளில் வண்டல் மண் நீக்கம் காரணமாக கூடுதல் நீரை சேமிக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+