கறிக்கடைக்காரருக்கு சோபியா மீது ஒரு கண்ணு.. யார் கூட போனில் பேசினாலும் டவுட்! கடைசியில் அலறிய சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்தேகம் ஒரு உயிரை கொன்றுவிடும்.. அதிலும் மதுபோதை ஒரு குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்திவிடும்.. சென்னையில் நடந்த இந்த சம்பவத்திலும் கணவனின் சந்தேகமும் குடிபோதையும் சேர்ந்து ஒரு பெண்ணின் உயிரை பறித்துவிட்டது.. இப்போது 7 வயது மகன் மட்டும் தாய், தந்தை இருவரையும் இழந்து நிற்கிறான்.. நடந்தது என்ன?

மாங்காடு அடுத்த பட்டூரைச் சேர்ந்தவர் முஜைதீன்.. 30 வயதாகிறது.. இவர் கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோபியா (26). 8 வருடம் முன்பு திருமணமான நிலையில், இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

Chennai butcher Mangadu

கடந்த சில நாட்களாகவே சோபியா செல்போனில் அடிக்கடி நீண்ட நேரம் யாருடனோ பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை கவனித்த முஜைதீன், யாரிடம் போனில் பேசுகிறாய்? என்று கேட்டுள்ளார். ஆனால், சோபியா ஏதோ சொல்லி மழுப்பி விட்டாராம்.. இதனால் சோபியா மீது முஜைதீனுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

கறி வெட்டும் கத்தி

கணவர் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகிறார் என்று தெரிந்துகூட சோபியா போனில் பேசுவதை நிறுத்தவில்லை.. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறும் நீடித்து வந்துள்ளது.. 2 நாட்களுக்கு முன்பும் சோபியா, யாரோ ஒரு ஆணுடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசி கொண்டிருந்தாராம்.. இதை பார்த்து முஜைதீன் பயங்கர ஆவேசமாகி விட்டார்.. மறுபடியும் கண்டித்துள்ளார், மறுபடியும் தகராறு செய்துள்ளார். ஆனால், சோபியாவின் அலட்சியம் முஜைதீனுக்கு உச்சக்கட்ட ஆத்திரத்தை தந்தது,

இதனால் முஜைதீன், கிச்சனில் இருந்து, கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, சோபியாவை வெட்டிவிட்டார்.. இதனால் பலத்த காயம் ஏற்பட்ட சோபியா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த இறந்துவிட்டார். உடனே முஜைதீன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்..

மாங்காடு பஸ் ஸ்டாண்டு

சோபியாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.. உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார் சோபியாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு தப்பி ஓடிய முஜைதீனை தேடி வந்த நிலையில், மறுநாள் காலையில் மாங்காடு பஸ் ஸ்டாண்டு அருகே அவர் நின்று கொண்டிருந்தார்.. உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது மனைவி சோபியாவை கொலை செய்தது குறித்து முஜைதீன் பல்வேறு பகீர் தகவல்களை வாக்குமூலமாக போலீசாரிடம் தந்துள்ளார்.

சோபியாவை கொன்றது ஏன்

அதாவது, சோபியாவை ஆசை ஆசையாக காதலித்துதான் திருமணம் செய்தாராம் முஜைதீன்.. கடந்த சில மாதங்களாகவே முஜைதீன் தீவிர குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார்.. இதனால் வேலைக்கும் போகாமல், நாள் முழுவதும் வீட்டிலேயே போதையிலேயே இருந்துள்ளார்.. இதை சோபியா கண்டித்திருக்கிறார்..

கணவனின் நிலைமை கண்டு கலங்கிய சோபியா, உடனடியாக அவரை, போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கும் சேர்த்திருக்கிறார்.. ஒருசில நாட்கள் மட்டும் குடிக்காமல் இருந்த முஜைதீன், மறுபடியும் மதுபோதைக்கு அடிமையாகிவிட்டாராம்.. வேலைக்கும் போகமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

ஆட்டோ டிரைவருடன் நட்பு

இதனால் குடும்பத்தை நடத்த சோபியா திணறி வந்துள்ளார்.. அதனால் அந்த பகுதியிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்..

வீட்டிலிருந்து கிளம்பி, ஷேர் ஆட்டோவில்தான் வேலைக்கு செல்வாராம் சோபியா.. அப்போதுதான், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது.. செல்போனில் ஆட்டோ டிரைவரிடம் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார்.. இது முஜைதீனுக்கு தெரியவந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

பிறகு குடும்பத்திலுள்ள பெரியவர்கள் சோபியாவுக்கு அட்வைஸ் தந்துள்ளனர்.. உடனே சோபியாவும், ஆட்டோ டிரைவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார்.. ஆனாலும், சோபியா மீது முஜைதீனின் சந்தேகம் தீரவில்லை. எந்த போன் வந்தாலும், சந்தேகப்பட்டு சோபியாவை அடித்து உதைத்து வந்துள்ளார்..

சம்பவத்தன்று என்ன நடந்தது?

சம்பவத்தன்றுகூட, தன்னுடைய தோழியுடன் சோபியா பேசி கொண்டிருந்தார்.. நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை பார்த்ததுமே, அந்த ஆட்டோ டிரைவருடன்தான் பேசுகிறார் என முஜைதீன் சந்தேகப்பட்டு சோபியாவை அடித்து உதைத்துள்ளார்..

அப்போதும் மதுபோதையில்தான் முஜைதீன் இருந்துள்ளார்.. போதை தலைக்கேறி ஆவேசத்தில் சோபியாவின் கையிலிருந்த செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்துள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராமல்தான், முஜைதீன் சமையலறையில் இருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, சோபியாவின் நெஞ்சு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரி வெட்டியுள்ளார்.

சோபியா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து விட்டார்.. இவ்வளவு தகவல்களையும் முஜைதீன் வாக்குமூலமாக தந்துள்ளார்... தொடர்ந்து முஜைதீனிடம் விசாரணை நடக்கிறது.

இப்போது தாயும் இல்லாமல், தந்தையும் இல்லாமல் அந்த 7 வயது குழந்தை கதறி கொண்டிருக்கிறது.. இந்த மதுபோதை இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+