1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை
சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை தற்போது ஒரு சவரன் ஒரு லட்சத்தை நெருங்கி வரும் சூழலில், நகைக்கடைக்கு சென்று ஒரு சவரன் நகை வாங்கும்போது கடைக்காரர்கள் போடும் கணக்கு பலருக்கும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.. பெரும்பாலும் மக்கள் அன்றைய தங்கம் விலையை மட்டும் பார்த்துவிட்டுச் செல்கிறார்களே தவிர, பில் போடும்போது வரும் கூடுதல் தொகையைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.. இதை பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஒரு சவரன் என்பது 8 கிராம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அந்த 8 கிராம் நகைக்கு நீங்கள் செலுத்தும் தொகைக்கும், அன்றைய தங்கம் விலைக்கும் இடையில் குறைந்தது 15% முதல் 20% வரை வித்தியாசம் இருக்குமாம்.. இந்த கூடுதல் தொகை எதனால் வசூலிக்கப்படுகிறது மற்றும் சரியான கணக்கீடு எது என்பதைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு வாடிக்கையாளரின் கடமையாகும்..

1 சவரன் நகை
முதலில், அன்றைய 22 காரட் தங்கம் விலையை 8-ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்.. இதுதான் உங்கள் நகையின் அடிப்படை விலை.. இதற்கு அடுத்து வருவதுதான் சேதாரம், கூலி போன்றவையாகும்.
உதாரணமாக, 1 சவரன் நகையின் அடிப்படை விலை மற்றும் இதர கட்டணங்கள் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் வருகிறது என்றால், அதற்கு 3,000 ரூபாய் ஜிஎஸ்டி வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.. அதனால் நகைக்கடை விளம்பரங்களில் போடும் விலையை விட, பில்லில் வரும் இறுதித் தொகை இந்த வரிகள் மற்றும் கட்டணங்களால் சிறிது கூடுதலாக இருக்கலாம்.
நகை வாங்கப் போறீங்களா
ஒரு நகையை செய்யும்போது தங்கம் உருக்கப்பட்டு செதுக்கப்படுவதால் ஏற்படும் இழப்பைச் சேதாரம் என்கிறார்கள்.. இது பொதுவாக நகையின் வடிவமைப்பை பொறுத்து 8% முதல் 18% வரை இருக்கும்.
சில பெரிய கடைகளில் 20% வரை கூட வசூலிக்கப்படலாம்.. நீங்கள் 8 கிராம் நகை வாங்குகிறீர்கள் என்றால், 12% சேதாரம் போட்டால், நீங்கள் கிட்டத்தட்ட 9 கிராம் தங்கத்திற்கான விலையை செலுத்த வேண்டியிருக்கும்.. அதனால் நகை வாங்கும்போது சேதாரம் எவ்வளவு என்பதை தெளிவாகக் கேட்டுப் பேரம் பேசுவது அவசியமாகும்.
நகைக்கடை கணக்கீடு
அடிப்படை விலை மற்றும் சேதாரம் சேர்த்த பிறகு வரும் மொத்த தொகைக்கு 3% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.. இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் செல்லும் வரி என்பதால் இதில் மாற்றம் செய்ய முடியாது.
இது தவிர, ஒவ்வொரு நகைக்கும் ஹால்மார்க் (HUID) முத்திரை இடப்படுவதால், அதற்குக் கட்டணமாக சுமார் ரூ.45 வசூலிக்கப்படும். எனவே இந்த அனைத்து விபரங்களும் உங்கள் பில்லில் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
பல சமயம் வாஸ்டேஜ் என்ற பெயரில் அதிகப்படியான தொகை மறைமுகமாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என்று அலர்ட் செய்கிறார்கள் நிபுணர்கள்.. அதனால் பில்லில் தங்கம் விலை, சேதாரம், வரி ஆகியவற்றை தனித்தனியாக பிரித்துக் காட்டச் சொல்லிக் கேட்க வேண்டும்.
நகை கணக்கீட்டில் இவ்வளவு மாற்றமா
பழைய நகையை மாற்றும்போது இன்னும் கூடுதல் கவனம் தேவை. ஒருவேளை பழைய 22 காரட் நகையை விற்கும்போது, அன்றைய விலையில் இருந்து சுமார் 2% முதல் 5% வரை Melting loss அதாவது உருக்குக் கழிவு என்று பிடிப்பார்கள். அதுவும் உங்க நகையில் அழுக்கு , இதர உலோகங்கள் ஏதாவது கலந்திருந்தால் இந்த மதிப்பு இன்னும் குறையலாம்.
அதேபோல், கற்கள் பதித்த நகைகளை வாங்கும்போது, கற்களின் எடையைத் தங்கத்தின் எடையில் இருந்து கழித்துவிட்டுத்தான் தங்கம் விலையைக் கணக்கிட வேண்டும். கற்களுக்கு தனியாக விலை நிர்ணயம் செய்யப்படும்.. கற்களின் எடையைத் தங்கத்தின் விலையில் சேர்த்துக் கணக்கிட்டால் அது உங்களுக்குப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்..
ரசீது அவசியம்
எனவே நகை வாங்கும்போது, விற்கும்போது அதெல்லாம் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்.. குறிப்பாகக் கூகுளில் அன்றைய விலையை சரிபார்ப்பதுடன், கடையில் அவர்கள் போடும் சதவீத கணக்கை நீங்களே உங்கள் செல்போனிலும் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ரசீதுகளை கேட்டுப் பெறுவது பிற்காலத்தில் அந்த நகையை மாற்றும்போது உங்களுக்கு ஆதாரமாக இருக்கும்..!!
-
தங்க நகை வாங்கும்போது இந்த 3 தவறு பண்ணிட்டீங்களா? ஆயிரங்களில் நஷ்டம் உறுதி -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள்












Click it and Unblock the Notifications