சொத்து வாங்க போறீங்களா? தமிழகத்தில் வந்த புதிய மாற்றம்.. இனி இந்த செலவு இல்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லங்கச் சான்றிதழ் தொடர்பாக பத்திரப்பதிவுத்துறையில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடு அல்லது மனை வாங்கும்போது முதலில் அந்த சொத்துக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்... அதுக்காகத்தான் வில்லங்கச் சான்றிதழ் (EC) பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட வில்லங்கச் சான்றிதழில்தான் இப்போது முக்கிய மாற்றம்.. அது என்ன?

முதலில் வில்லங்கச் சான்றிதழ் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதை எளிமையாகச் சொன்னால், ஒரு வீடு அல்லது நிலத்தின் மீது ஏற்கனவே ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கியமான ஆவணம்தான் வில்லங்கச் சான்றிதழ்.

EC rules Property rules New rule

பத்திரப்பதிவில் மாற்றம்

அந்த சொத்து முன்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதா, அடமானம் வைக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதாவது பதிவு பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள இது உதவும். அதனால்தான் வீடு, நிலம் வாங்குவதற்கு முன்பு வில்லங்கச் சான்றிதழை சரிபார்ப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட வில்லங்கச் சான்றிதழ் தொடர்பாகத்தான் இப்போது பத்திரப்பதிவுத்துறை புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.. அதுவும், ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் பொதுமக்களுக்கு செலவு மற்றும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வில்லங்கச் சான்றிதழ்

தமிழகத்தில் புதிய திட்டங்களின் கீழ், வீடு, மனை வாங்குவதற்கான பத்திரம், வங்கியில் கடன் பெறுவதற்காக ஆவண ஒப்படைப்பு அடமானம், கடன் நிறைவுக்கான ரசீது உள்ளிட்ட சில ஆவணங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத வகையில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையில் சில சிக்கல்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். அதனால், பொதுமக்களுக்கு தேவையில்லாத சிரமம் ஏற்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட சில நடைமுறைகளில் மாற்றங்களை செய்ய பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.

அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

- இனி கட்டணம் செலுத்தி வில்லங்கச் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய திட்டங்களின் கீழ் வீடு, மனை விற்பனை பத்திரங்கள் மற்றும் அடமான ஆவணங்களை பதிவு செய்யும்போது, இணையதளத்தில் கட்டணம் இல்லாமல் பெறப்படும் வில்லங்கச் சான்றிதழே போதுமானது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

- ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரங்களை குடிமக்கள் நுழைவு வாயிலாக தாக்கல் செய்தாலும் அவை பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கடன் நிறைவு தொடர்பான ரசீது ஆவணங்களை பதிவு செய்யும்போது வில்லங்கச் சான்றிதழை பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நேரடி வருகையில்லா பத்திரப்பதிவு தொடர்பாகவும் சில முக்கிய விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த முறையில் ஆவணதாரர் எங்கேயிருந்தாலும் இணையதளம் வழியாக பதிவு செய்ய முடியும். இதனால், "பிரசன்டேஷன் பவர்" எனப்படும் சிறப்பு பொது அதிகார ஆவணங்களை பயன்படுத்த முடியாது.

- நேரடி வருகையில்லாமல் பத்திரப்பதிவு செய்யும் நாளில் விடுமுறை நாளாக இருந்தாலும், அதற்காக தனியாக விடுமுறை நாள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் பொதுமக்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் தொடர்பான நடைமுறை எளிமையாகியுள்ளது. குறிப்பாக, கட்டணம் செலுத்தி தனியாக வில்லங்கச் சான்றிதழ் பெற வேண்டிய சிரமம் இனி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+