கூட்டணி பற்றி ஆலோசிக்க நேரம் வந்துவிட்டது.. குறைந்த நாதக வாக்குகள்.. சீமானுக்கு இனி ஒரு வழிதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோல்வி அடைவது உறுதியாகி இருக்கிறது. இரு தொகுதியிலும் நாதகவால் 5 ஆயிரம் வாக்குகளை கூட வாங்க முடியாத சூழலில், இனி வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சீமான் ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கின்றன. அதேபோல் கூட்டணியின்றி திமுக 2வது இடத்தை பிடித்திருக்கிறது.

By Election 2026

அதிமுக 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனை விடவும் மோசமான தோல்வியை நாதக அடைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மதுராந்தகத்தில் 1,100 வாக்குகளையும், தாராபுரத்தில் சுமார் 3,500 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிக நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான்.

ஆனால் டெபாசிட் கூட நாதக வேட்பாளர்களால் வாங்க முடியவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே நாதக வேட்பாளர்களை அறிவிக்க கூடாது.. இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டு கட்சியின் கட்டமைப்பில் கவனம் செலுத்துவோம் என்று நிர்வாகிகள் கூறி இருந்தனர். ஆனால் சீமான் கடைசி வரை ஒப்புக்கொள்ளாமல், வேட்பாளர்களை அறிவித்தார்.

இந்த இடைத்தேர்தலுக்கு பின் அடுத்ததாக 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரவுள்ளது. அதேபோல் அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்னும் சிலர் ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த இடைத்தேர்தலின் போது திமுக அல்லது அதிமுக உடன் கூட்டணி அமைத்து நாதக போட்டியிடுவது அந்தக் கட்சியின் எதிர்காலத்திற்கு சிறந்த ஒன்றாக விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

வட மாவட்டங்களில் பாமக எப்படி வன்னியர்கள் வாக்குகளை கைப்பற்றி வலுவாக இருக்கிறதோ, அப்படியான வியூகத்தை நாதக பின்பற்ற வேண்டும் என்றும் சில ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வரும் காலத்தில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் சீமான் இணையக் கூடும் என்றும் கருதப்படுகிறது. சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் நாதகவினர் பலரும் சீமானிடம் இதுதொடர்பாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+