மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. யாருக்கு வெற்றி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

Subscribe to Oneindia Tamil

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றது. ஆளுங்கட்சியான தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாதக சார்பில் ஜானகி ராமன், சிபிஎம் சார்பில் சுகந்தி ஆகியொோர் களமிறங்கி இருக்கின்றனர். அதேபோல் சுயேட்சைகள் உட்பட 27 பேர் போட்டியில் உள்ளனர்.

அதேபோல் தாராபுரம் தொகுதியில் தவெக சார்பாக சத்தியபாமா, திமுக சார்பாக சுகன்யா, அதிமுக சார்பாக பானுமதி, நாதக சார்பாக கார்த்திகா, சிபிஐ சார்பாக லட்சுமணன் மற்றும் சுயேட்சைகள் உட்பட 22 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இருப்பினும் 2 தொகுதிகளிலும் மும்முனைப் போட்டியே நிலவி வருகிறது. அக்டோபர் 6ல் நடந்த வாக்குப்பதிவில் மதுராந்தகம் தொகுதியில் 1,84,423 வாக்குகள் பதிவாகின.

By Election 2026 By Election results 2026 Madhuranthagam by election Dharapuram by election

அதேபோல் தாராபுரம் தொகுதியில் 1,79,214 வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் தொகுதியில் 86.26 சதவிகித வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 80.25 சதவிகித வாக்குகளும் பதிவாகின. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முதலில் தபால் வாக்குகளும், பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிவடைந்த பின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முன்னணி நிலவரங்கள் குறித்து ஒலி பெருக்கியில் அறிவிக்கப்படும். அதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களும் திரள்வார்கள் என்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தவெக ஆட்சி அமைந்து 4 மாதங்களே ஆகி இருக்கும் சூழலில், இந்த இடைத்தேர்தலில் வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. மறுபக்கம் திமுக பலமான எதிர்க்கட்சி என்பதை காட்டவும், விஜய் மீது அதிருப்தி இருக்கிறது என்பதை நிரூபிக்க தீவிரமாக உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை 2 தொகுதிகளில் வென்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+