மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.. சூடுபிடிக்கும் களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதன்படி மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள் பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் அந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

By-elections nominations Election Commission

இடைத்தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இடதுசாரிகள் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது. இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு இருந்த விஜய் ராஜினாமா செய்தார்.

இதே போன்று மதுராந்தகம், தாராபுரம், பெருந்தறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய சட்டசபை தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தாராபுரம் தொகுதி

தாராபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றிருந்தார். இன்று தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 16 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்டிவோவுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்காக தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டு, வேட்புமனு படிவங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மதுராந்தகம் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்று இருந்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இந்த தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

இதற்காக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். தேர்தல் பணிகளை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

வேட்பு மனு கடைசி நாள்

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9 (இன்று)
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 16
வேட்புமனு பரிசீலனை: செப்டம்பர் 17
மனு வாபஸ் பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
வாக்குப்பதிவு: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: அக்டோபர் 9

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+