தவெக ஆட்சிக்கு ஆதரவு.. கட்சிக்கு எதிர்ப்பு.. கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு.. ஏன் இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சிக்கு ஆதரவு, ஆனால் கட்சிக்கு இடைத்தேர்தலில் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்திருக்கின்றனர். அரசியல் அறிவார்ந்தவர்கள் மேடையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு சரியானதாக பேசப்பட்டாலும், சாமானிய மக்களிடம் ஒரு விசித்திரமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன. இதன்பின் அதிமுகவில் இருந்து 6 எம்எல்ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Bypoll

இந்த இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து தவெக பக்கம் தாவிய மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருக்கும் விஜய் சீட் கொடுத்துள்ளார். விரைவில் பிரச்சாரமும் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், திடீரென வேட்பாளரை அறிவித்துள்ளன.

இதன் மூலமாக தவெக ஆட்சிக்கு ஆதரவு.. ஆனால் தவெக என்ற அரசியல் கட்சிக்கு எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் தரப்பில், அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றுவிட்டு 15 நாட்களில் தவெக பக்கம் வருவது எப்படி நியாயம்? இது குதிரை பேரம் இல்லையா என்று முதல்வர் விஜய்யை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இப்படியான சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது குதிரை பேரம் நடத்திய கட்சிக்கு தேர்தல் களத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் கம்யூனிஸ்ட்கள், அந்த கட்சியின் ஆட்சிக்கு மட்டும் ஆதரவு அளிப்பது சரியா என்று கேள்வி எழுகிறது. இதற்கு சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் பதில் அளிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

இது அந்தந்த கட்சிகளின் அரசியல் நிலைப்பாடு என்று எடுத்து கொண்டாலும் கூட, சாமானிய மக்கள் மத்தியில் குழப்பமான கேள்விகளே எழுகின்றன. சட்டசபையில் முதல்வர் விஜய் ஆதரவளிக்கும் அளவிற்கு நல்லவராகவும், தேர்தல் களத்தில் விஜய் கட்சியின் வேட்பாளர்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்களா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.

தவெக ஆட்சியின் கொள்கைகள், நிலைப்பாடுகள் தவறானவை என்று கருதினால், அந்த ஆட்சிக்கான ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்வது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதன் மூலமாக இந்த இடைத்தேர்தல் தவெக ஆட்சி மீதான மக்கள் மனநிலை மட்டுமல்லாமல், இடதுசாரி கட்சிகளின் கொள்கை சார்ந்த அரசியலை சோதனை செய்யும் களமாகவும் மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+