தளபதி ஸ்டாலின்.. சி.பி ராதாகிருஷ்ணனின் திடீர் திமுக பாசம்.. பாஜக தலைகள் ஷாக்.. பின்னணி என்ன?
பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனின் திடீர் திமுக பாசம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை: பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனின் திடீர் திமுக பாசம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் திருமண விழா ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக திமுக தலைவர் ஸ்டாலின் திகழ்கிறார். தமிழக அரசியலில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் இருக்கிறார்.
மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது. ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது, என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

வைரல்
அவரின் இந்த திடீர் பேச்சு தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் வலுவான தலைவர் ஒருவர், ஏன் திடீர் என்று இப்படி பேசுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள். பாஜகவின் கூட்டணியான அதிமுகவையும் இந்த பேட்டி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் ''இது சிபி ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட கருத்து'' என்றுள்ளார்.

தலைவர்
அதே சமயம் இதற்கு பின் தமிழக பாஜக தலைவருக்கான போட்டியும் ஒரு காரணம் என்கிறார்கள். முதலில் தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான பரிந்துரையில் சி.பி ராதாகிருஷ்ணன் பெயரும் அடிபட்டது. சி.பி ராதாகிருஷ்ணன் கோவையில் மிகவும் வலுவான தலைவர். தமிழக பாஜகவில் கொஞ்சம் எல்லோரும் தெரிந்த தலைவர். அதனால் அவர் தமிழக பாஜக தலைவராக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

காரணம்
ஆனால் தற்போது தமிழக பாஜகவிற்கு புதியவரும் இளைஞருமான பி. முருகானந்தம் வர வாய்ப்புள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள். அதே சமயம் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கு வர கூட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனால் சி.பி ராதாகிருஷ்ணன் தரப்பு கொஞ்சம் அதிர்ச்சியில் இருப்பதாக பேசப்படுகிறது.

வலுவானது
அதேபோல் பாஜக வலுவாக இருக்கும் கோவையில் சி.பி ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்ததும், கட்சியின் மேலிடத்தை கோபம் அடைய செய்துள்ளது. இதை காரணம் காட்டி அவருக்கு தலைவர் பதவி மறுக்கப்படலாம். இப்படி பல்வேறு காரணங்களால் சி.பி ராதாகிருஷ்ணன் தலைவர் பதவியை பெறுவது சிரமம் என்று கூறுகிறார்கள். இதனால்தான் தற்போது சி.பி ராதாகிருஷ்ணன் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேச தொடங்கி உள்ளார் என்கிறார்கள்.

என்ன கர்நாடகா
கர்நாடகாவில் பாஜக இதேபோல் எடியூரப்பாவை புறக்கணிக்க நினைத்தது. நிறைய காரணங்களை சொல்லி அவரை சில வருடங்கள் முன் புறக்கணித்தது. இதனால் கட்சியை விட்டு வெளியேறிய எடியூரப்பா தன்னுடைய பலம் என்ன என்பதை தேர்தலின் போது நிரூபித்தார். எடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவில் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்ட பாஜக மீண்டும் அவரிடம் அனுசரணையாக சென்றது.

அதே அரசியல்
அதேபோல்தான் தற்போது சி.பி ராதாகிருஷ்ணன் செயல்படுகிறார் என்கிறார்கள். திமுகவிற்கு ஆதரவாக பேசி, பாஜக தேசிய தலைமையின் பார்வையை அவர் தன் பக்கம் திருப்பி உள்ளார். எடியூரப்பா எடுத்த அதே ஆயுதத்தை இவர் எடுத்துள்ளார். இதை கண்டிப்பாக பாஜக தேசிய தலைமை கவனமாக கையாளும் என்று பேசிக்கொள்கிறார்கள்.

ஒரே அடையாளம்
ஏனென்றால் இவர் தமிழகத்தில் பாஜகவின் அடையாளமாக இருக்கும் தலைவர்களில் ஒருவர். கொங்கு பகுதியில் மட்டுமே பாஜக கொஞ்சம் வலுவாக இருக்கிறது. அதற்கு இவர் முக்கிய காரணம். இவரை பாஜக தலைமை கவனமாக கையாளும். சி.பி ராதாகிருஷ்ணனின் இந்த திடீர் ஸ்டாலின் பாசம் பாஜகவினரை மட்டுமில்லாமல் திமுகவினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications