சசிகலா வந்த பின் பாருங்கள்.. அமமுகவின் அதிரடி திட்டம் என்ன.. சி.ஆர்.சரஸ்வதி விளக்கம்
அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார். இவர் சசிகலா குறித்தும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நடந்த உறுப்பினர் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் கட்சியின் எதிர்காலம் குறித்தும் இதில் பல விஷயங்கள் பேசப்பட்டது.

இதன்பின் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார். அதில் அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். எல்லா உறுப்பினர்களும் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். தினகரன் வழிகாட்டும் திசையில் கட்சி பயணிக்கும்.
அமமுகவில் தலைவர் என்ற பதவியை உருவாக்கவும் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர்தான் தலைவி. அதிமுகவுக்கு உரிமை கோரும் சட்டப் போராட்டங்கள் தொடரும்.
அதனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து வழக்கு போடுவோம். அவர் வந்தபின் முக்கியமான மாற்றங்கள் நடக்கும். அதை சசிகலா கவனித்துக் கொள்வார் என்று, அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications