குறையும் நார்மல் டெலிவரி.! 10ல் 6 பெண்களுக்கு சிசேரியன்.. தமிழ்நாட்டிலும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பிரசவத்தின்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடைபெறுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனைகளில் 10 பெண்களில் சுமார் 6 பேருக்கு சிசேரியன் நடக்கும் நிலையில், தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்படுவதை தடுக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குழந்தை பெற்று கொள்வது என்பது இப்போது மிக பெரிய பிஸ்னஸ் ஆகிவிட்டது. இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரவி வரும் கருத்தரிப்பு மையங்களே அதற்கு சாட்சி. கருத்தரிப்பிலேயே மிக பெரிய பிஸ்னஸ் நடக்கும் நிலையில், சமீப காலங்களாக சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொள்வது அதிகரித்துள்ளதாம்.

C-Section Deliveries Rise in Tamil Nadu hospital tamil nadu maharashtra

10ல் 6 பெண்கள்

குறிப்பாக மகாராஷ்டிராவில் 10ல் 6 பெண்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் மூலமாகவே பிரசவம் நடக்கிறதாம். 2026-27ஆம் ஆண்டுக்கான டேட்டாவை எடுத்து பார்த்தால்.. செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற 3,23,245 பிரசவங்களில் 1,18,036 பிரசவங்கள் சிசேரியன் முறையில் நடந்துள்ளன. இது 37 சதவீதமாகும். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் நிலைமை வேறாக உள்ளது. அங்கு நடைபெற்ற 3,18,683 பிரசவங்களில் 1,89,152 சிசேரியன் மூலம் நடந்துள்ளன. அதாவது, 59 சதவீத பிரசவங்கள் அறுவை சிகிச்சையாகவே உள்ளன.

ரொம்ப அதிகம்

இது ஏதோ புதிய மாற்றம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இதே நிலை தான் இருக்கிறது. 2015-16 காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் 18.3 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24 ஆய்வில் அது 23.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இது 39.1%ல் இருந்து 48.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மும்பையில் அரசு மருத்துவமனைகளில் 51 சதவீதமும், தனியார் மருத்துவமனைகளில் 59 சதவீதமும் சிசேரியன் பிரசவங்களாக உள்ளன. மகாராஷ்டிராவின் மாநகராட்சி பகுதிகளில் இந்த விகிதம் அரசு மருத்துவமனைகளில் 50 சதவீதமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 64 சதவீதமாகவும் உள்ளது. அதாவது தனியார் மருத்துவமனைகளிலேயே அறுவை சிகிச்சை அதிகமாக இருக்கிறது.

தமிழ்நாடு

இந்த பிரச்சினை மகாராஷ்டிராவுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. தமிழ்நாட்டிலும் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் 2015-2016 ஆய்வின்போது 34.1 சதவீதமாக இருந்த சிசேரியன் விகிதம், 2019-2021இல் 44.9 சதவீதமாகவும் 2023-24ல் 46.9 சதவீதமாகவும் அதிகரித்ததுள்ளது. மகாராஷ்டிராவை போலவே தமிழ்நாட்டிலும் தனியார் மருத்துவமனைகளிலேயே சிசேரின் அதிகம். தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 64 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 39 சதவீதமும் சிசேரியன் நடக்கிறது.

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் சிசேரியன் விகிதம் 10 முதல் 15 சதவீதம் வரைதான். ஆனால் தமிழகத்தின் விகிதம் இதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. ஐஐடி மெட்ராஸ் ஆய்வின்படி, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளைவிட சுமார் மூன்று மடங்கு அதிகமாக சிசேரியன் செய்யப்படுகிறது.

காரணங்கள்

சிசேரியன் அதிகரிப்பது குறித்து டாக்டர் துஷார் பால்வே கூறுகையில், "வயதான பிறகு கருத்தரிப்பது, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினைகள், பிசிஓஎஸ் போன்றவை கர்ப்பத்தை சிக்கலாக்கி சிசேரியனுக்கு காரணமாக அமைகிறது. மேலும், ஐவிஎஃப் மூலம் உருவாகும் கர்ப்பம், குழந்தையின் எடை, குழந்தை தலைகீழாக இல்லாமல் வேறு நிலையில் இருப்பது, கர்ப்பப்பையில் பனிக்குட நீர் குறைவாக இருப்பது ஆகியவையும் காரணமாக இருக்கிறது.

இது மட்டுமின்றி பிரசவ வலி குறித்த பயம், குடும்பத்தினரின் அழுத்தம், நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதும் சிசேரியனை நோக்கி தள்ளுகிறது. நார்மல் பிரசவத்துக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை ஆகலாம்; சிசேரியன் பொதுவாக 30 முதல் 45 நிமிடங்களில் முடிந்துவிடும் என்பதால் மருத்துவமனைகளின் பணிச்சுமை குறையும்" என்றார்.

நடவடிக்கை

அதற்காக யாருக்குமே சிசேரியன் தேவையில்லை. அனைவருமே நார்மல் டெலிவரிக்கு தான் முயல வேண்டும் என சொல்ல முடியாது. சிக்கலான சூழல் உருவாகும் போது, தாய், குழந்தையின் உயிரை காப்பாற்ற சிசேரின் ரொம்பவே முக்கியம். ஆனால், அது பெரிய அறுவை சிகிச்சை என்பதால் தொற்று, அதிக ரத்தப்போக்கு உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. இதனால் மகாராஷ்டிரா அரசு இதில் நடவடிக்கை எடுத்துள்ளது. தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+