Rajya sabha: நாடாளுமன்றத்திலும் தவெக? மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் குறிவைக்கிறாரா விஜய்?
சென்னை: தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, அதிமுகவின் முக்கிய முகமும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், சட்டசபை தேர்தலில் வென்றுவிட்டதால், அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், காலியாகும் அந்த இடத்தைக் கைப்பற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம், அக்கட்சியின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்கு வகிப்பவர். சமீபகாலமாக நிலவி வரும் கட்சி உள் விவகாரங்களால் தனது பதவியைத் துறந்து, முழுமையாக மாநில அரசியலில் கவனம் செலுத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால்தான் ராஜ்யசபா எம்பியாக இருக்கும் போதிலும் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு மயிலம் தொகுதியின் எம்எல்ஏவாகியுள்ளார். இதனால் அவர் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
தவெக-வின் வியூகம்?
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டது. இதில் 108 தொகுதிகளில் தவெக வென்றுள்ளது.
சி.வி.சண்முகம் ராஜினாமா செய்வதால் தவெக சார்பில் ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்ப முடிந்தால், அது கட்சிக்குத் தேசிய அளவில் ஒரு அங்கீகாரத்தைத் தரும் என அக்கட்சித் தலைமை கருதுவதாகத் தெரிகிறது.
அரசியல் கணக்கு: மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. ஒரு எம்பிக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. எனவே தவெக இந்த மாநிலங்களவை எம்பி பதவியை பெற முனைப்பு காட்டும் என சொல்லப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications