C Vijayabaskar: விஜயபாஸ்கருக்கு அதிகரிக்கும் நெருக்கடி! 9 மணி நேர விசாரணை முடிந்த கையோடு மனைவிக்கு ED சம்மன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் சி விஜபாஸ்கர், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர் ஆனார். அவரிடம் 9 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். தற்போது நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று இருந்த நிலையில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் விஜயபாஸ்கர் இணைந்துள்ளார்.

C Vijayabaskar wife Ramya summoned by ED officials on related to money laundering case

அமலாக்கத்துறை வழக்கு

கடந்த திமுக ஆட்சி காலத்தின் போது விஜயபாஸ்கருக்கு எதிராக போடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 54 சதவீதம் அளவுக்கு சொத்துகளை விஜயபாஸ்கர் வாங்கி குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது. கடந்த 2024 ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் குற்றப்பத்திரிக்கை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 மணி நேரம் விஜயபாஸ்கரிடம் விசாரணை

இந்த வழக்கு விசாரணை தனியாக நடந்து வரும் நிலையில் அமலாக்கத்துறை சார்பில் டாக்டர் விஜயபாஸ்கருக்கும், அவருடைய மனைவி ரம்யாவுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த வாரம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், விஜயபாஸ்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.

காலை 11 மணியில் இருந்து இரவு 7 மணி வரை, 9 மணி நேரம் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. 9 மணி நேர விசாரணைக்கு பிறகு, மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விஜயபாஸ்கரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர் மனைவிக்கு சம்மன்

இதையடுத்து, விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விஜயபாஸ்கரிடம் அளித்த பதில்கள் அடிப்படையில் ரம்யாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை வேகம் காட்டுவதால் சி விஜயபாஸ்கருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. விராலி மலை சட்டமன்ற தொகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்லாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் அமலாக்கத்துறை வழக்கும் வேகம் எடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+