விஜய்யால் சீமானுக்கு ஏற்படும் சேதாரம்.. தம்பிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சி வோட்டர் சர்வே ரிப்போர்ட்!
சென்னை: இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் விஜய்யின் வருகையால் சீமானின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. விஜய்யின் தவெக சுமார் 15 சதவிகித வாக்குகளை பெறும் என்றும், சீமான் சுமார் 7 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் நிறுவனம் இணைந்து தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி என்டிஏ கூட்டணிக்கு 33 சதவிகித வாக்குகளும், திமுக கூட்டணி 45 சதவிகித வாக்குகளையும், மற்ற கட்சிகள் 22 சதவிகித வாக்குகளையும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மற்ற கட்சிகள் பிரிவில் தவெக இடம்பெற்றுள்ளது. அதன்படி தவெக 15 சதவிகித வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் பங்கு போடுவார்கள் என்று தெரிகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மற்ற கட்சிகள் இணைந்து 15 சதவிகித வாக்குகளை மட்டுமே பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 5 மாதத்தில் 7 சதவிகித வாக்குகள் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஒப்பிடும் போது திமுகவின் வாக்கு சதவிகித 3 சதவிகிதமும், என்டிஏ கூட்டணியின் வாக்குகள் 4 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் விஜய் வேகமாக வளர்ந்து வருவதாக கணிக்கப்படுகிறது. விஜய் இன்னும் முழு நேர பிரச்சாரத்தில் ஈடுபடாத சூழலில், 15 சதவிகித வாக்குகள் என்பது மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதிக்கு பின் இது அதிகரிக்கவும் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய்யின் வளர்ச்சியால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விடவும் நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதே இந்த கருத்துக்கணிப்பின் மறைமுக செய்தியாக அமைந்துள்ளது. ஏனென்றால் லோக்சபா தேர்தலில் சீமான் 8 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.
இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஆனால் விஜய்யின் வருகையால் சீமானின் வாக்கு சதவிகித குறைய தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சுயேட்சைகளின் ஒரு சதவிகிதம் வாக்குகளை பெறுவார்கள் என்று எடுத்துக் கொண்டாலும், சீமானின் வாக்கு 6 சதவிகிதமாக குறையும் என்று கணிக்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்ட சூழலில், அவர்கள் களத்தில் பணியாற்ற தொடங்கியுள்ளனர். ஆனாலும் நாதக வாக்கு சதவிகிதம் குறையத் தொடங்கி இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் சீமான் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல்












Click it and Unblock the Notifications