நெருங்கும் சட்டப்பேரவை கூட்டம்.. என்ன “பிளான்”? அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை - முக்கிய முடிவுகள்
சென்னை: அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூட இருக்கும் சூழலில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி கூட உள்ளது. இதில் எடுக்கப்பட்ட வேண்டிய முக்கிய முடிவுகள், நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் தாக்குதல்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.
இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, மா சுப்பிரமணியன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், சேகர்பாபு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆன்லைன் ரம்மி தடை
சமீபத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மக்களை ஏமாற்றும், தற்கொலைக்கு தூண்டும் இணையதள விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், அதற்கு நிரந்தர அதற்கு வழங்குவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நெல் கொள்முதல்
தமிழ்நாடு தற்போது நெல் கொள்முதலுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில், பருவ மழைக்காலமும் தொடங்கி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் வரும் நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்காக மத்திய குழுவும் இன்று தமிழ்நாடு வருகிறது.

நெல் பாதுகாப்பு
மத்திய அரசின் ஒப்புதல் இதற்கு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு நம்புகிறது. இந்த சூழலில் பருவமழையில் நெல் மழையில் நனைந்து ஈரமடைவதை தடுக்க, நெல் சேமிப்பு கிடங்குகளை பராமரிப்பது மற்றும் நெல்லை அரவைக்காக அனுப்புவது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பருவமழை
தமிழ்நாட்டில் ஏற்கனவே பல இடங்களில் வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வருவாய் துறை, உணவு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறைகள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications