அக்காவை எண்ணி சமாதியில் சாய்ந்த சசிகலா.. அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மானு தொண்டர்கள் கோஷம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் சசிகலா சென்ற போது அதிமுக பொதுச் செயலாளர் என சசிகலாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். அப்போது அவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் செல்லவில்லை. சரி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியிலாவது அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் அவர் செய்யவில்லை.

தொலைபேசியில் பேசிய தொண்டர்கள்
மாறாக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வந்தார். இந்த நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரது சமாதியில் இருந்து தனது தமிழக சுற்றுப்பயணத்தையும் அவர் தொடங்குவார் என சொல்லப்பட்டது.

அதிமுக தொண்டர்கள்
இந்த நாளுக்காக அமமுக தொண்டர்களும் சில அதிமுக தொண்டர்கள் (சசிகலாவின் ஆதரவாளர்கள், இரட்டை தலைமை எதிர்பார்ப்பாளர்கள், அதிருப்தியாளர்கள்) காத்திருந்தார்கள். அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தொலைபேசி மூலமும் கடிதம் வாயிலாகவும் சசிகலாவுக்கு பகிர்ந்து வந்தார்கள்.

அதிமுக பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்
இந்த நிலையில் நாளை அதிமுக பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றைய தினம் அதாவது அக்டோபர் 16 ஆம் தேதி சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்வார் என சொல்லப்பட்டது. இதற்கேற்ப கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சசிகலா தரப்பில் சென்னை ஆணையருக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.

அதிமுக கொடி
இதையடுத்து இன்றைய தினம் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அங்கு நீண்ட நாள் கழித்து தனது தோழியும் அக்காவுமான ஜெயலலிதாவின் சமாதியை பார்த்தவுடன் அவருக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. உடனை கையில் இருந்த கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

சமாதியில் சாய்ந்த சசிகலா
இதையடுத்து துக்கம் தாளாமல் அவர் சமாதியில் சாய்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா என அங்கிருந்த தொண்டர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினரோ சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.

கோஷம்
ஆனால் தொண்டர்களோ அதிமுக பொதுச் செயலாளர் என கோஷமிட்டுள்ளார்கள். இதனால் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகும் சசிகலா விரைவில் அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றே தெரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அதிமுக தலைமையில் நிச்சயம் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications