என்னாது விஜய்யா! பேர் சொல்லி அழைக்காதீங்கம்மா! தலைவரை தளபதின்னு சொல்லுங்க.. புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேர் சொல்லி அழைக்காதீர்கள். தலைவரை தளபதி என அழைக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அண்மைக்காலமாக நடந்து வருகிறது. விரைவில் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரமைப்பில் உளள 10 அணிகளின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டது.

Call Vijay as Thalapathy, dont call his name, bussy anand

அதன் படி விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.. மகளிர் அணியை சிறப்பாக கட்டமைக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த கூட்டத்தில் மகளிரணி நிர்வாகி ஒருவர் பேசினார், அப்போது அவர் நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை என்றார். அப்போது புஸ்ஸி ஆனந்த் குறுக்கிட்டு, பேர் சொல்லி அழைக்க வேண்டாம். தலைவரை தளபதி என்றே அழைக்க வேண்டும் என்றார். மேலும் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என பெண் நிர்வாகிகள் கேட்டதற்கு புஸ்ஸி ஆனந்த், அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டம் தொடங்கிய போதே பெண் நிர்வாகி ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும். தற்போது ஷூட்டிங்கில் இருந்தால் வீடியோ காலிலாவது பார்க்க வேண்டும் என்றார். உடனே மற்ற பெண்களும் ஆமாம் விஜய்யை பார்க்க வேண்டும், வீடியோ கால் போடுங்க என்றனர். உடனே புஸ்ஸி ஆனந்த், விஜய் இப்போது வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருப்பதால் நேரம் செட்டாகாது , எனவே அவர் தமிழகம் வந்ததும் ஒரு முறை எல்லாரையும் சந்திக்க வைக்கிறேன், இதற்கு நான் பொறுப்பு என கூறினார். இதையடுத்து பெண்கள் சமாதானமடைந்தனர். பிறகு கூட்டம் தொடங்கியது. ஆனால் இந்த கூட்டத்தில் அவர் எதிர்பார்த்ததை விட நிறைய பெண்கள் வந்தனர். இதனால் சற்று இடநெருக்கடி ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+