டோட்டலாக தவெகவை சாய்க்கும் 12,000 ஓட்டு? டென்ஷனை தரும் பாமக.. அன்று கருணாநிதி மாஸ்டர் பிளான் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெகவை சுற்றி 12,000 ஓட்டு என்ற கணக்கு பேசுபொருளாகியுள்ளது. இந்த வாக்குகள் யாருடைய கணக்கை மாற்றும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாமகவின் நிலைப்பாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையே, பல ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி எடுத்த ஒரு முடிவை சுட்டிக்காட்டி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சொன்ன அந்த அரசியல் கணக்கு கவனம் ஈர்த்துள்ளது.

பிரபல சேனல் ஒன்றில் ஷ்யாம் பேசியதாவது, "தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜனநாயகமும் அரசியல் நாகரிகமும் சீரழிந்து வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரு கட்சியில் வெற்றி பெற்றுவிட்டு சட்டமன்றத்தைக் கூட சந்திக்காமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதும், சுயநலத்துக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு சின்னத்தில் வெறும் 3 மாதங்களில் கூச்சமே இல்லாமல், மீண்டும் ஓட்டு கேட்பதும் தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காத ஒரு அசிங்கமான அரசியல் கலாச்சாரம்..

TVK PMK 12000 Votes TVK Election 12000

90களில் புதுக்கோட்டை இடைத்தேர்தல்

கடந்த 1990களில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் இடைத்தேர்தல்கள் நடந்தன.. 90களில் புதுக்கோட்டை இடைத்தேர்தலின் போது அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, அப்போதைய முதல்வர் கலைஞர் அதனை ஏற்க மறுத்தார்.

"எங்களுக்கென்று ஒரு கட்சி மாவட்டம் உள்ளது, மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர்.. பொது வேட்பாளரை போட்டால் எங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு என்ன உற்சாகம் கிடைக்கும்? ஜெயலலிதா இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று போகட்டும்.. அதுதான் ஜனநாயகம்.. அடுத்த தேர்தலில் நாம் ஜெயிப்போம், அதற்காகக் கட்சியை விட்டுக்கொடுக்க முடியாது" என்று கலைஞர் உறுதியாக சொன்னார்..

பொது வேட்பாளர் வேண்டாம்

எனவே பொது வேட்பாளருக்கு எந்த கட்சியுமே எப்போதுமே தயாராக இருக்க மாட்டார்கள்.. நாம் தமிழர் கட்சி அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இடைத்தேர்தலில் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தவே தயாராக இருக்கின்றனவே தவிர, பொது வேட்பாளர் என்ற பெயரில் தங்கள் சின்னத்தையோ அல்லது வாய்ப்பையோ விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதில்லை. காரணம் கட்சி அரசியல்தான்.

எதிர்காலத்தில் வேறொரு தேர்தலில் முடிவெடுப்பதில் சிக்கல் வரும் என்பதாலும், கம்யூனிஸ்ட்கள் போன்ற கட்சிகளுக்கு ஓட்டு வீதம் குறைந்தாலும் அவர்கள் தங்களது பலத்தை நிலைநிறுத்தவே விரும்புவார்கள்..

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்காளர்கள், தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ள குதிரை பேர அரசியலைக் கண்டிக்கும் வகையிலும், இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தங்களது வாக்கைப் பயன்படுத்த வேண்டும்..

விஜய் மீதான ஈர்ப்பு அல்லது விமர்சனங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவே பரப்பப்படுகிறது.. அது எந்நேரமும் மாறலாம்..

மதுராந்தகம் மற்றும் தாராபுரம்

இந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் அது மேலும் எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்களையும் கட்சி தாவல்களையும் ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய நிலைப்பாடுகளைத் தடுத்து நிறுத்தவும், அதிமுக போன்ற கட்சிகள் அழிந்துவிடாமல் பாதுகாக்கவும் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இது கிடைத்துள்ளது..

பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளது.. விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது பாமக போட்டியிட்டது மற்றும் அப்போது அதிமுக ஆதரவு அளிக்கவில்லை என்பது பொருத்தமற்ற வாதமாகும். ஏனென்றால், அப்போது கூட்டணி இல்லை.. ஆனால் 2026-க்குள் கூட்டணி அமைந்துவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய அளவிலான என்.டி.ஏ கூட்டணியில், அதிமுக அங்கம் வகிக்கிறது.. அதில் பாமக ஒரு கட்சியாக இணைந்து 18 இடங்களைப் பெற்று சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது.

பாமக யாருக்கும் ஆதரவு இல்லை

அவர்கள் தவெகவை அரசியல் ரீதியாக விமர்சித்து எதிர்க்கின்றனர்.. திமுகவோடு கூட்டணி என்று இதுவரை அறிவிக்கவில்லை. எனவே, இடைத்தேர்தலில் புறக்கணிப்பு இல்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் சொல்வது சரியான அர்த்தத்தைத் தராது. பாமகவிற்கு ஒரு தயக்கம் உள்ளது, அதாவது அங்கு அவர்களுக்கு 12,000 வாக்குகள் வரை இருக்கக்கூடும், ஆனால் அது 15,000 வாக்குகளைத் தாண்டாது.

கடந்த தேர்தலில் தவெக, அதிமுக பெற்ற வாக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அதிமுக கூட்டணி தவெகவை விட கூடுதலாக 7,000 முதல் 10,000 வாக்குகள் வரை அதிகமாக வாங்கியுள்ளது. தவெக, அதிமுகவுக்கு இடையேயுள்ள இந்த வாக்கு வித்தியாசத்திற்குக் காரணம், அங்கே உள்ள பாமகவின் வாக்குகள்தான். ஏனென்றால், சேலம் போன்ற பகுதிகளைப் போல இல்லாவிட்டாலும், மதுராந்தகம் பகுதியில் பா.ம.க-விற்கு என்று சில கிராமங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வாக்கு வங்கி உள்ளது.

திமுக, கம்யூனிஸ்ட்

மறுபுறம், திமுகவைப் பொறுத்தவரை முந்தைய தேர்தல்களில் அவர்களுடன் இருந்த கூட்டணி கட்சிகள் இன்றைக்கு தவெகவுடன் உள்ளன.. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக நிற்கின்றன.. அதுவும் ஒரு வகையில் சற்று குழப்பமான விஷயம்தான்.

இடதுசாரிகள் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் நிலையில், இடைத்தேர்தலில் தவெகவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து ஒருவேளை இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? ஏற்கனவே இருக்கும் அவர்களின் எம்எல்ஏக்கள், தவெக அரசுக்கு ஆதரவளிப்பார்கள், ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்ற முரண்பாடுதான் அங்கே ஏற்படும்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு வரை வேறு கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட வேட்பாளர்கள் தற்போது மாறுபட்ட சின்னங்களில் நிற்பதும் தேர்தல் களத்தில் குழப்பமான சூழலை உருவாக்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+