அஸ்திவாரத்தையே அசைக்கும் பிரபல நடிகர்? அந்த 2 இடமா? படக்குனு பார்த்த பாஜக.. அண்ணாமலைக்கு பயங்கர குஷி
சென்னை: எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தன்னுடைய ஆதரவை பாஜகவுக்கு வழங்கியிருக்கிறது. இதையடுத்து, சமக மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கடந்த வருடமே அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.. இது சமகவில் உள்ள பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதனால் ஒரு தரப்பினர் அதிமுகவில் சென்று இணைந்துவிட்டனர். ஆனாலும், சரத்குமார் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
கூட்டணி: ஜெயலலிதா காலத்தில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்றிருந்த நிலையில், திடீரென விலகி அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.

ஒருமுறை சரத்குமார் பேசும்போது, "2026-ம் ஆண்டு தேர்தலில் கஷ்டமோ, நஷ்டமோ சமத்துவ மக்கள் கட்சி தனியாக போட்டியிட வேண்டும்... மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.. எம்பி தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் சமக பணியாற்றி வருகிறது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை" என்று கூறியிருந்தார்.
பாஜக விமர்சனம்: இதற்கு நடுவில் பாஜகவையும் விமர்சித்திருந்தார் சரத்குமார்.. "இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகாவில் இருந்தாலும் தண்ணீர் தருவதாக இல்லை... ஒரு நாட்டுக்குள் இந்த பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை? இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்கிறார்களே, அந்த ஒரே நாட்டில் இப்படியான பிரச்சினைகள் வருவது வேடிக்கையாக உள்ளது" என நறுக்கென கேட்டிருந்தார் சரத்குமார்.
ஆக, அதிமுகவையும், பாஜகவையும் விமர்சித்திருந்ததாலும், திமுகவை அவ்வளவாக விமர்சிக்காததாலும், திமுகவுடன் கூட்டணியில் சேரப்போகிறதோ என்ற ஐயம் எழுந்தது.
திமுக, அதிமுக: ஆனால், அக்கட்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், "படிப்படியாக தமிழகத்தில் மதுவிற்பனையை குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.. பூரண மதுவிலக்கு என்பதால், எப்படியும் திமுகவுடனும் கூட்டணி இல்லையோ? என்ற சந்தேகம் கிளம்பியது.
3 நாட்களுக்கு முன்பு சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சியில் கடன் அதிகரித்துள்ளது, ரூ 6 லட்சம் கோடியாக இருந்த கடன், இப்போது ரூ 8.3 லட்சம் கோடியாக எகிறிவிட்டது.. இதை பார்க்கவே பயமாக இருக்கு.. இதையெல்லாம் எப்படி அடைக்க போறாங்க? என்ன திட்டம் வைத்திருக்கிறாங்க? இப்படியே இலவசங்களை தந்துகொண்டே இருக்கிறாங்க.. இலவசம் வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும். அதனால்தான் கஜானா காலியாக உள்ளது" என்று திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
பாஜக பேட்டிகள்: சமீபகாலமாகவே, பாஜகவை புகழ்ந்து பேட்டிகளை தந்துவந்த நிலையில், தற்போது அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.. இதையடுத்து, மத்திய அமைச்சர் எல்.முருகன், எச்.ராஜா, தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சரத்குமாரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
இறுதியில், மோடியை மறுபடியும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.. மற்ற விவரங்கள் எல்லாமே இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு என்று தெரிவித்து, அறிக்கை ஒன்றையும் சரத்குமார் வெளியிட்டுள்ளார். அண்ணன் சரத்குமாரின் வரவு பாஜக கூட்டணிக்கு நிச்சயம் உந்துசக்தியாக இருக்கும் என்று அண்ணாமலையும் வரவேற்றிருக்கிறார்.
தென்மாவட்டம்: வடமாவட்டங்களைவிட, தென் மாவட்டங்களில் சமத்துவ மக்கள் கட்சிக்கு செல்வாக்கு ஓரளவு உள்ளது. குறிப்பாக, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி தொகுதிகளில் சமகவுக்கு ஆதரவு ஓரளவு இருக்கிறது.. இதில் தென்காசி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார் சரத்குமார்.. தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.
அதனால்தான் இந்த முறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி 2 தொகுதிகளை, பாஜகவிடம் கேட்டு பெற போவதாக தெரிகிறது.
எனவே, கன்னியாகுமரி, நெல்லையை கேட்டு வருகிறது.
2 தொகுதிகள்: ஆனால், இந்த 2 தொகுதிகளையும் பாஜக ஒதுக்குமா? என்று தெரியவில்லை. காரணம், இந்த 2 தொகுதிகளிலுமே பாஜகவுக்கும் செல்வாக்கு இருப்பதால், சரத்குமாருக்கு தர வாய்ப்பில்லை என்கிறார்கள்.. எனினும், சமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எது? எத்தனை சீட் என்பதில் ஆர்வம் அதிகமாக எழுந்துள்ளது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
இதையா கொடுத்தாங்க? தாம்பூலப் பையை திறந்து பார்த்த உறவினர்கள் ஷாக்! திருநெல்வேலியில் அந்த சம்பவம் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications