பிரபல நடிகர் சரத்குமார் திடீர் முடிவு.. திமுக மேடையில் ராதிகா.. கலைந்த புதுச்சேரி கூடாரம்.. அதேதானா?
சென்னை: திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைக்க போகிறதோ? என்ற சந்தேகம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், திமுக சார்பில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், மகளிர்தின விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது ராதிகா பேசும்போது, "இது அரசியல் விழாவாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் பெண்களுக்கான விழாவாக ஒருங்கிணைத்து இருக்கிறார்கள்..

இதில் நான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் செல்ல மகளாக பங்கேற்று இருக்கிறேன். அவரிடம் நான் பயிற்சி பெற்றது இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் இன்னும் அவரின் குடும்பத்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். அதுபோல் என் அப்பா எம்ஆர் ராதா மற்றும் கலைஞர் கருணாநிதி இருவரின் நட்பு அற்புதமானது என்று பேசியிருந்தார்.
அரசியல்வாதிகள்: சமத்துவ மக்கள் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் பிரபல நடிகை ராதிகா.. இந்த விழாவில் பங்கேற்றிருந்தது, பலரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. இது ஒரு மகளிர் விழா என்பதால் ஒரு பிரபல நடிகையாக, சக அரசியல்வாதியாக ராதிகா கலந்து கொண்டதாக தெரிகிறது.. ஆனால், மேடையில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்தும் புகழ்ந்து பேசியிருந்த நிலையில், சமக அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பையும் அப்போது ஏற்படுத்தியிருந்தது.
அதுமட்டுமல்ல, இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. கட்சி தொடங்கியது முதல் பெரும்பாலும் அதிமுக கூட்டணியிலேயே பயணித்து வந்த சரத்குமார், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதுதான் அங்கிருந்து வெளியேறினார். இதற்கு பிறகு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து மறுபடியும் அழைப்பு வரும் என்று எதிர்பார்த்த சரத்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்பட்டது..
அதிமுக கூட்டணி: இதனிடையே தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான், தனித்தே தேர்தலை சந்திப்பது என்றும் முடிவெடுத்தாராம். இதற்கு பிறகுதான், அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சரத்குமார் அறிவித்திருந்தார். இப்போது, விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், சமகவின் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை அவரது தொண்டர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
4 நாட்களுக்கு முன்பு, சமக தலைவர் சரத்குமார் ஒரு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில், எம்பி தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் சமத்துவ மக்கள் கட்சி பணியாற்றி வருகிறது. அதிமுகவை பொருத்தவரையில் A,B,C மூன்றாக கட்சி பிரிந்துள்ளது. இது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை. பேசி தீர்த்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக இந்த கட்சியை தனி ஒரு மனிதனாக சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறேன்.
சமக நிலைப்பாடு: சமத்துவத்திற்காக சமத்துவ ஜனநாயகத்திற்காக தங்கள் கட்சி போராடி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை" என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் ஒருமுறை சரத்குமார் அறிவித்திருந்த நிலையில், திமுகவுடன் இந்த முறை கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திமுகவை அவ்வளவாக விமர்சிக்காத நிலையில், திமுக கூட்டணியுடன் சமக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
அதிர்ச்சி ஆதரவாளர்கள்: இதனிடையே, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டதால், சமகவில் உள்ள ஒருதரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இதனால், புதுச்சேரியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்..
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், துணைச் செயலாளர் செந்தில்குமார், அவைத் தலைவர் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, கூண்டோடு விலகி தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இனியும் பலர் சமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
யாருடன் கூட்டணி: அந்தவகையில், சமகவில் அனலடித்துகொண்டிருக்கிறது.. அத்துடன், எம்பி தேர்தலைவிட, சட்டமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்த போகிறது என்று சரத்குமார் தெளிவுபடுத்தியிருந்தாலும்கூட, திமுகவுடன் சமக கூட்டணி வைக்கக்கூடுமோ என்ற சந்தேகமும் அழுத்தமாக கிளம்பி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications