முந்துகிறதா திமுக? பிளேட்டு திரும்புதா.. வளையத்துள் பிரபல நடிகர்? கணக்கு சரியா வருமா? கவனிக்குது பாஜக
சென்னை: மக்களவை தேர்தலுக்கு நாட்கள் மிகவும் குறைவாக உள்ளது.. உச்சக்கட்ட பிரச்சாரங்கள் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்நிலையில், நடிகர் விஜய்யின் ஆதரவு யாருக்கு? என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.
நடிகர் விஜய், புதிதாக அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார்.. வரப்போகும் சட்டமன்றத்தில்தான், போட்டியிட போவதாகவும், இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார்.

குழப்பம்: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, இப்போதே எதற்காக கட்சியை துவங்கினார்? என்ற குழப்பம் இன்னமும் அரசியல் களத்தில் எழுந்து வருகிறது..
அதேசமயம், கட்சியை ஆரம்பித்திருக்கிறாரே இன்னும் அந்த கட்சியின் கொள்கைகள் என்ன? என்பது வெளிப்படையாக தெரியவில்லை.. கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன் வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியல் பயணம் துவங்கும் என்று அறிவித்து, மிகுந்த எதிர்பார்ப்பை விஜய் ஏற்படுத்தி வருகிறார்.
ஆதரவு யாருக்கு: எனினும், விஜய்யின் ஆதரவு யாருக்கு? ஆர்வமும் கிளம்பி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு விஜய் பெயரில் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன.. ஆனால், அந்த அறிக்கை போலியானது எனறு அவரது தரப்பிலேயே விளக்கம் அப்படியானால், இந்த தேர்தலில் யாருக்காவது ஆதரவு தரப்போகிறாரா? என்பது தெரியவில்லை.
இப்போதைக்கு விஜய் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருக்கிறராம்.. தேர்தலுக்கு 2 தினங்களுக்கு முன்புதான் ஓட்டு போடுவதற்காக சென்னை வருகிறாராம். எனவே, அவரது ஆதரவு யாருக்கு என்பதில் சஸ்பென்ஸ் நீடித்தவாறே உள்ளது.
இதனிடையே இன்னொரு தகவல் இணையத்தில் கசிந்து கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்த்: அதாவது, ரஜினிகாந்த்தின் ஆதரவை பெறுவதற்காக பாஜக முயல்வதுபோல, விஜய்யின் ஆதரவை திமுக பெறுவதற்கு முயல்கிறதாம். ஏற்கனவே தலைவர்களின் ரோடு ஷோ மூலம் , பாஜகவின் மவுசு தமிழகத்தில் உயர்ந்துள்ள நிலையில், ரஜினியும் பாஜகவுக்கு ஆதரவை தந்துவிட்டால், அது பாஜகவுக்கு மேலும் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிடும்.. எனவேதான், விஜய்யின் ஆதரவை பெற திமுக தரப்பு முயல்வதாக சொல்கிறார்கள்.
இதற்காக விஜய்யிடம் நெருக்கமாக இருக்கும், மநீம தலைவர் கமல்ஹாசன் மூலம் இந்த ஆதரவை பெறுவதற்கான முயற்சியிலும் திமுக இறங்கியிருப்பாக தகவல்கள் கசிகின்றன.
விஜய் : ஏற்கனவே, விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு க்கிறது. அத்துடன், 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரது கட்சியில் புதிதாக இணைந்துள்ளதால், இதனை தங்கள் பக்கம் திருப்பவும் திமுக திட்டமிடுவதாகவும் தெரிகிறது.
அந்தவகையில், விஜய்யின் ஆதரவை கமல் பெறுவாரா? அப்படியே ஆதரவு கேட்டாலும் விஜய் அதற்கு ஒத்துழைப்பு தருவாரா? அல்லது இதுபோன்ற தகவல்கள் எல்லாம் வெறும் வதந்தியா? என்றெல்லாம் தெரியவில்லை..
இங்கு இன்னொரு சந்தேகமும் நமக்கு கிளம்புகிறது.. சில மாதங்களுக்கு முன்பு விழா ஒன்றில் விஜய் பேசியபோது, தன்னுடைய பேச்சில் பெரியாரை முன்னிலைப்படுத்தியிருந்தார்.. ஆனால், மறைந்த முதல்வர்கள் அண்ணாவின் பெயரையோ, கலைஞர் பெயரையோ சொல்லவில்லை.. மாறாக, பெரியார், அம்பேத்கர், காமராஜர் பெயரை மட்டுமே முன்னிலைப்படுத்தியதால், இந்துத்துவாவுக்கு எதிரான அரசியலை கையில் எடுக்க போகிறாரா? என்கிற சந்தேகம் எழுந்தது.
ஈடுபாடுகள்: அதேசமயம், தமிழ்த் தேசிய சிந்தனைகளிலும் அவரது ஈடுபாடு இருப்பதாக தெரியவில்லை. அப்படியானால், விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை மட்டுமே விஜய் முன்னெடுக்கலாம் என்றே அனுமானங்கள் கூறின..
அதாவது, விஜய்யின் அரசியல், அது மாதிரியும் இல்லாமல், இது மாதிரியும் இல்லாமல், ஒருபுது மாதிரியான அரசியலாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும்போது, விஜய்யின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்குமா? என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications