Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலையை கண்டுக்கவேயில்லையே? "மாஸ்டர்" எடப்பாடி பழனிசாமி! எல்லாமே மாறுது! அப்ப திமுக சுதாரிக்கணுமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு அதிமுக தயாராக துவங்கியிருக்கிறது.. இதுகுறித்த சில முக்கிய தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நேற்று முன்தினம், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். வழக்கமான தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடிக்கு வாழ்த்து கூறினாலும், இதில் ஒருசிலரின் மீது கவனம் அதிகமாகவே விழுந்துள்ளது.

Can AIADMK Alliance with Actor Vijay and did Edappadi Palanisamy say about Tamil Nadu BJP Annamalai

வானதி: அதில் முக்கியமானவர் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்டோரும் எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லியிருந்தார்கள்.

அதுபோலவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து கூறியிருந்தார.. "தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்" என்று அண்ணாமலை எடப்பாடிக்கு ஹேப்பி பர்த்டே கூறியிருந்தார்.

நன்றி அறிக்கை: இதற்கு எடப்பாடி பழனிசாமியும், தன்னை வாழ்த்தியோருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், அதில், பாஜகவை சேர்ந்த ஒருவரது பெயரையும் காணோம்.. அண்ணாமலை, வானதி, ஆளுநர் ரவி உட்பட யார் பெயரையுமே சொல்லாமல், மற்ற தலைவர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார் எடப்பாடி.

அவ்வளவுஏன்? இப்போது அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்க்குகூட நன்றி சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ஆனால், தாமரை கட்சியில் ஒருத்தர் பெயரையும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடாமல் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறாராம் எடப்பாடி.

பாராட்டு: இப்படிப்பட்ட சூழலில் அதிமுக மூத்த தலைவர் செல்லுார் ராஜுவின் பேட்டி அதற்குமேல் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. செல்லூர் ராஜுவை பொறுத்தவரை, எம்ஜிஆரையும் பாராடுவார்.. ரஜினியையும் பாராட்டுவார்.. விஜய்யையும் பாராட்டுவார்.. "மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள், பாசத்திற்காக எதையும் செய்வார்கள்" என்று விஸ்வாசம் படபாணியில் பேசி, அஜித்தின் ரசிகராகவும் தன்னை வெளிப்படுத்தி கொண்டவர்.

நேற்று முன்தினம் செல்லூர் ராஜு ஒரு பேட்டியில், "விஜய் அரசியல் கட்சி துவங்கியது மகிழ்ச்சி. எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு, மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவது விஜய்க்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை" என்று கூறியிருந்தார்.

கூட்டணி கணக்கு: விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், செல்லூர் ராஜூவின் இந்த பேச்சை, சாதாரணமாக கடந்து போக முடியாது என்கிறார்கள் .. அதாவது, விஜய்க்கும், அதிமுகவுக்கும் ஏதாவது நெருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதோ? என்ற சந்தேகத்தை இணையவாசிகளே கிளப்பி விட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட இந்த யூகங்கள் உண்மைதான் என்பதுபோலவும், அதிமுகவுக்குள் பேசிக்கொள்கிறார்களாம்..

அதாவது, வரப்போகும் சட்டசபை தேர்தலில் விஜய் இறங்கினால், அவருடன் திமுக நெருக்கமாகலாம்.. அல்லது சீமானும் நெருக்கமாகலாம்.. கமலும் நெருக்கமாகலாம்.. காங்கிரசும் நெருக்கமாகலாம்.

வாக்குகள்: ஆக, விஜய்யுடன் யார் சேர்ந்தாலும், அதிமுக வாக்குகள் வெகுவாக பிரியவும் வாய்ப்புள்ளதால், தமிழக வெற்றிக்கழகத்தை அதிமுக பக்கம் திருப்பும் முயற்சியை அதிமுக கையில் எடுத்துள்ளதாம். விஜய்யை அதிமுக அரவணைக்கும்பட்சத்தில், திமுகவுக்கும் டஃப் கொடுக்க முடியும் என்றும் அதிமுக மேலிடம் கணக்கு போடுகிறதாம்.

சுருக்கமாக சொல்லப்போனால், கடந்த 2011ல் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து, ஜெயலலிதா முதல்வரானது போல, 2026ல் விஜய்யுடன் சேர அதிமுக இப்போதே காய்நகர்த்துவதாகவும் சொல்கிறார்கள்.

பெருத்த நம்பிக்கை: முடிந்தால், ஊரக உள்ளாட்சி தேர்தலிலேயே விஜய்யின் ஆதரவை பெறவும் அதிமுக முனைப்பு காட்டலாம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, விஜய்யின் பல படத்திற்கு ஏற்பட்ட தடையை நீக்கி உதவியிருக்கிறார் என்பதால், நிச்சயம் தன்னுடைய ஆதரவை விஜய் தருவார் என்றும் அதிமுக தரப்பு நம்புகிறதாம்.

ஒருவேளை அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆனால்? விஜய்யை துணை முதல்வராக்கினால்? இப்படியெல்லம் கற்பனைகள் கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது, விஜய் - திமுக குறித்து ஒரு முக்கிய தகவல் இணையத்தில் கசிந்திருந்தது.. அதாவது, ரஜினிகாந்த்தின் ஆதரவை பெறுவதற்காக பாஜக முயல்வதைபோலவே, விஜய்யின் ஆதரவை திமுக பெறுவதற்கு முயன்றதாம்..

ரஜினி: இதற்கு காரணம், பாஜக மேலிட தலைவர்களின் ரோடு ஷோ மூலம் , பாஜகவின் மவுசு தமிழகத்தில் உயர்ந்துவிட்ட நிலையில், ரஜினியும் பாஜகவுக்கு ஆதரவை தந்துவிட்டால், அது பாஜகவுக்கு மேலும் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிடும்.. எனவேதான், விஜய்யின் ஆதரவை பெற திமுக தரப்பு முயன்றதாம். எனவே, விஜய்யிடம் நெருக்கமாக இருக்கும், மநீம தலைவர் கமல்ஹாசன் மூலம் இந்த ஆதரவை பெறுவதற்கான முயற்சியிலும் திமுக இறங்கியிருப்பதாக செய்திகள் கசிந்திருந்தன.

ஆனால், அப்படியொரு முயற்சியை திமுக அப்போது எடுத்ததாக தெரியவில்லை. இப்போது, சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அதிமுக முந்திக்கொள்ள பார்க்கிறதாம்.

சாத்தியமா: ஏற்கனவே, விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு நிறையவே இருந்து வருகிறது.. அத்துடன், 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரது கட்சியில் புதிதாக இணைந்துள்ளதால், இதனை யார் தங்கள் பக்கம் திருப்பி அறுவடை செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.. அதிமுகவுக்கு விஜய் ஆதரவு தருவாரா? அல்லது விஜய்யின் ஆதரவை கமல் பெறுவாரா? அல்லது இதெல்லாம் வழக்கம்போல் வெறும் வதந்தியாகவே காற்றில் கரைந்துவிடுமா? என்றெல்லாம் தெரியவில்லை..

ஆகமொத்தம், செல்லூர் ராஜூ வைத்த "கூட்டணி வெடி", சட்டசபை தேர்தலில் எப்படி வெடிக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+