திமுகவின் மகளிர் உரிமை தொகை vs அதிமுகவின் குலவிளக்கு திட்டம்.. எது பெஸ்ட்? எது சாத்தியம்?
சென்னை: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) தனது முதல் கட்ட வாக்குறுதிகளை சனிக்கிழமை அன்று வெளியிட்டது. இதில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை வேறு வடிவத்திற்கு மாற்றும் வகையில் அதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
திமுகவின் செயல்பாட்டில் உள்ள மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கும் அதிமுக வாக்குறுதியாக அளிக்கும் குலவிளக்கு திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பாப்போம்.

'குலவிளக்கு திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் இந்த உதவித்தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
மகளிர் உரிமை தொகை திட்டம் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு மட்டும் வருமானம், குடும்ப பின்னணி ஆகிய சோதனை செய்து பின்னர் கொடுக்கப்படும். ஆனால் குலவிளக்கு திட்டத்தில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு தரப்படுவதால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
குலவிளக்கு திட்டம் என்பது பெயர் அடிப்படையில் பிற்போக்கு தனத்தை போதிக்கும் வகையில் உள்ளது. மாறாக மகளிர் உரிமை தொகை திட்டம் உரிமையை பெற்றுத்தரக்கூடிய திட்டம் என்ற பின்னணியை கொண்டு உள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பொருளாதார சுமை அரசுக்கு குறைவாக இருக்கும். பணக்கார குடும்பங்களுக்கு ரூ.1000 சிறிய தொகையாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு இது அத்தியாவசியம் இல்லை. ஆனால் குலவிளக்கு திட்டத்தில் அவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்பதால் அரசுக்கு சுமை ஏற்படும்.
ஏற்கனவே அரசு கடனில் உள்ள நிலையில் இது தேவையில்லாத கூடுதல் சுமையை ஏற்படுத்தும். உரிமை தொகை திட்டம் தேவைப்படும் பெண்களுக்கு சென்றடைவதால்.. இது கூடுதல் டார்கெட் உடன் செயல்படும். இதனால் செய்யப்படும் செலவு கூட ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.
இதனால் குலவிளக்கு திட்டம் எந்த அளவிற்கு சாத்தியமாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதிமுக கொடுத்த மற்ற வாக்குறுதிகள்
அதிமுக கொடுத்த மற்ற வாக்குறுதிகளில், நகரப் பேருந்துகளில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவசப் பயணம். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணி நாட்களை 125லிருந்து 150 ஆக உயர்த்தப்படும்.
வீடற்றவர்களுக்கு நகர்ப்புறங்களில் குடியிருப்புகள் வழங்குதல், திருமணத்திற்குப் பிறகு மகன்கள் தனிக்குடித்தனம் அமைக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயக் குடும்பங்களுக்குத் தனி வீடுகள் கட்டுதலுக்கு நிதி உதவி செய்யப்படும். 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கை
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்தநாளில் இந்த ஐந்து வாக்குறுதிகளை அறிவித்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பெண்களை முதன்மைப்படுத்தும், மக்கள் நலன் சார், மாண்பையும் பொருளாதார நீதியையும் போற்றும் வாக்குறுதிகளுடன் இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார். "மக்களை முதன்மைப்படுத்தும் அ.தி.மு.க.வின் ஆளுமை மரபை இந்த வாக்குறுதிகள் பிரதிபலிக்கின்றன. மகளிர் அதிகாரம், வாழ்வாதார மேம்பாடு, அனைவருக்கும் வீடு, உழைப்புக்கு மாண்பு ஆகியவற்றில் எங்களின் கவனம் உள்ளது," என அவர் தெரிவித்தார்.
'குளவிளக்கு திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், இந்த உதவித்தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் பழனிசாமி கூறினார். தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1,000 வழங்கி வரும் நிலையில், அ.தி.மு.க. அதை ரூ.1,000 உயர்த்தி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் விரிவுபடுத்துகிறது.
மற்றொரு முக்கிய வாக்குறுதி, தற்போது பெண்களுக்கு உள்ள இலவச நகரப் பேருந்து பயணத் திட்டத்துடன், ஆண்களுக்கும் அதை விரிவுபடுத்துவதாகும். மேலும், வீடற்றவர்களுக்கு நகர்ப்புறங்களில் குடியிருப்புகள் வழங்குதல், திருமணத்திற்குப் பிறகு மகன்கள் தனிக்குடித்தனம் அமைக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயக் குடும்பங்களுக்குத் தனி வீடுகள் கட்டுதல், 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 மானியம் வழங்குதல் ஆகியவையும் அ.தி.மு.க.வின் பிற திட்டங்களாகும். "நல்லாட்சியைக் மீட்டெடுக்கும், நலிந்தவர்களைக் காக்கும், வெறும் கோஷங்கள் அல்லாமல் உண்மையான பலன்களை அளிக்கும் ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வையைத் தமிழ்நாட்டிற்கு அ.தி.மு.க. வழங்கும்," என்று பழனிசாமி உறுதியளித்தார்.
திமுக தேர்தல் அறிக்கை
ஆனால் இதை விட பிரம்மாண்டமான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக இன்னும் திறக்க வேண்டிய "பண்டோரா பாக்ஸை" திறக்கவே இல்லை.. அதை திறந்ததும் எதிர்க்கட்சிகளுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என்று திமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த நெருக்கடி வேறு எதுவும் இல்லை.. ஆளும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் என்கிறார்கள்.
அதாவது 2026 தேர்தலுக்காக அவர்கள் கொடுக்க போகும் வாக்குறுதிகள் கண்டிப்பாக எடப்பாடி, விஜய் உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பை பெரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்று கூறப்படுகிறது.
1. பெண்களுக்கான புதிய திட்டங்கள் இதன் மூலம் கொண்டு வரப்படும்.
2. முக்கியமான பல இலவச திட்டங்கள் இதன் மூலம் கொண்டு வரப்படும்.
3. இளைஞர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் திட்டமிட்டு வரப்படுகிறது.
4. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026ஐ முன்னிட்டு பல புதிய நலத்திட்டங்களை ஆளும் திமுக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தேர்தல் வாக்குறுதிகளும் வலிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலுக்கு பின் மகளிர் உரிமை தொகை உயர்த்துவது, அரசு ஊழியர்களுக்கு நலத்திட்டங்கள், புதிய இலவசங்கள் என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளன.
புதிய செயலி அறிமுகம்
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் (விவசாயிகள், வணிகர்கள், தொழில் அதிபர்கள் உட்பட) கருத்துக்களைப் பெற ஜனவரி 3, 2026 சனிக்கிழமை புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் ஏற்கெனவே தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவை கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்த ஸ்டாலின், புதிய செயலி, வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் வழியாக கருத்துகள், பரிந்துரைகளைச் சேகரிக்கும் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க இந்த செயலி அமைக்கப்படுகிறது. அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்டாலின் எடுக்கும் சர்வே
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சர்வே ஒன்றை நிர்வாகிகள் மூலம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்று, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தினருடனும் பேச உள்ளது. பல முக்கியமான கேள்விகளை கேட்க உள்ளனர். பொங்கல் பரிசு வந்ததா, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவி தங்கள் வீட்டைச் சென்றடைந்ததா என விசாரித்து, ஒரு படிவத்தை வழங்கி விவரங்களை பெறுவார்கள்.
படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்படும். அதில் கோரிக்கையின் நிலையை அறிய முடியும். அவர்களுக்கு இருக்கும் கோரிக்கைகளை கேட்டு, அதன் அடிப்படியில் உடனடி தீர்வு அல்லது தேர்தல் வாக்குறுதிகளாக திமுகவினர் இதை வழங்குவார்கள் என்று ஆளும் திமுக தரப்பு கூறி உள்ளது.
-
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி












Click it and Unblock the Notifications