"அடிஆள்".. சாராய அமைச்சர் யாருங்க.. பாண்டிச்சேரி பக்கம் போனீங்கன்னா.. பாஜகவை வெளுத்த மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன் தமிழக பாஜகவை கடுமையாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: அண்ணாமலையை ஒரு அரசியல்வாதியாகவே நான் பார்க்கவில்லை.. பாஜக மூலம் அடியாளாக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.. தமிழக அரசியலுக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் மனுஷ்யபுத்தரன் காட்டமாக கூறியுள்ளார்.
கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
மேலும், கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளதாகவும், இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை, தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

மனுஷ்யபுத்திரன்
அதேபோல, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான விற்பனை தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட்டால் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு, சாராய அமைச்சர் என்றும் கூறி விமர்சித்துள்ளார்.. இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக, திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் கருத்து தெரிவித்துள்ளார். நம் ஒன் இந்தியா தமிழுக்கு மனுஷ்யபுத்திரன் அளித்த ஸ்பெஷல் பேட்டியில் சொன்னதாவது:

வசூலோ வசூல்
டாஸ்மாக் விஷயத்தை பொறுத்தவரை, அது அதிமுக ஆட்சியாக இருந்தாலும்சரி, தீபாவளிக்கு எவ்வளவு விற்பனையானது என்பதை அரசே அறிவிக்கும்.. இது வழக்கமாக உள்ள நடைமுறை.. ஆனால், இந்த முறை அரசாங்கத்திற்கு விற்பனை தொகை வரும்முன்பே, ஊடகத்திற்கு இந்த தகவலை பரப்பியது யார்? எங்கிருந்து பரப்பினார்கள்? தீபாவளிக்கு இவ்வளவு வசூலை செந்தில் பாலாஜி டார்கெட் செய்கிறார் என்று அந்த குறிப்பிட்ட ஊடகம், தீபாவளிக்கு முன்பே ஒரு ட்வீட் போட்டாங்க.. அதை கண்டிக்கவும், உடனே அந்த ட்வீட்டை டெலிட் செய்கிறார்கள்..

கருணை + ஈவு
ஓபிஎஸ், எடப்பாடிக்கெல்லாம் பதவி வெறிக்கான போட்டியில், மக்கள் பிரச்சனை பற்றி கவலையில்லை.. பாஜக ஏதாவது சொன்னால், எடப்பாடி + ஓபிஎஸ் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வழிமொழிவார்கள்.. காரணம், பாஜகவின் கருணை, இவர்களுக்கு யாருக்கு கிடைக்கும் என்பதில் இவர்களுக்குள் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.. அதனால், எது பேசினாலும் ஆதாரத்துடன் பேசுங்க.. அரசை விமர்சனம் செய்யுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.. விமர்சனம் எங்களுக்கு பிரச்சனை இல்லை.. ஆனால், பொய் சொன்னால், எங்களால் சகித்து கொண்டிருக்க முடியாது.. மக்களிடம் வதந்தியை, பீதியை உருவாக்க முயற்சி செய்தால், சும்மா இருக்க மாட்டோம்.. இதை பற்றி கேட்டால் கருத்து சுதந்திரம் என்று சொல்கிறார்கள்..

முடிச்சுக்கள்
இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொண்டிருக்கிறது.. இரண்டையும் முடிச்சு போடுவது என்பது அண்ணாமலையின் அற்ப அரசியலை காட்டுகிறது.. சாராய வியாபாரம் என்று அண்ணாமலை பேசுகிறாரே, பாண்டிச்சேரியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? பாண்டிச்சேரி என்றால் எது முதலில் ஞாபகம் வருகிறது? பாண்டிச்சேரிக்கு சென்று அங்குள்ள அரசை சாராய அரசு என்று அண்ணாமலை சொல்லட்டும்.. பாஜக ஆளக்கூடிய எல்லா மாநிலங்களிலுமே மது விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.. மோடி நண்பர் அதானி துறைமுகத்தில் பல்லாயிரக்கணக்கான பணமதிப்பில் போதை பொருள் விற்பனை கேந்திரமாக நடந்து கொண்டிருக்கிறது.. தைரியம் இருந்தால் அங்கே போய் பேசுங்க..

சாராய மினிஸ்டர்
சாராய அமைச்சர் என்றால், நீங்கள் ஆளக்கூடிய எல்லா மாநிலங்களிலும் உள்ளவர்கள் சாராய அமைச்சர்கள்தான்.. கேவலமான அணுகுமுறை இது. அண்ணாமலை என்னமோ மதுவிலக்குக்காக போராடியது மாதிரி பேசுகிறாரே.. அண்ணாமலை வாய் திறந்தாலே பொய்தான்.. எத்தனையோ குற்றச்சாட்டை திமுக அமைச்சர்கள் மீது சொன்னார்.. இதுவரை ஒன்றையாவது அவரால் நிரூபிக்க முடிந்ததா? ஒன்று சொல்லிவிட்டு இன்னொரு குற்றச்சாட்டுக்கு தாவிவிடுவார் அண்ணாமலை.. அவரை நான் ஒரு அரசியல்வாதியாகவே நான் பார்க்கவில்லை.. பாஜக மூலம் அடியாளாக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.. தமிழக அரசியலுக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications