தூள் தூளா சிதறுது.. "வளையத்துக்குள்" வரும் பாமக.. கொக்கி போட்டு தூக்குதா பாஜக.. பிப்.1ம் தேதி அதிரடி
சென்னை: பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற ஆர்வம் பலமாக எழுந்து வருகிறது.. இந்நிலையில்தான், அக்கட்சியின் தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. தமிழக கட்சிகள் தீவிர முன்னேற்பாடுகளில் இறங்கி உள்ளன.. அந்தவகையில், பாமகவும், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.

பொதுக்குழு: இது குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பில், பாமக-வின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம், வரும் பிப்ரவரி 1-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முன்னிலையில் நடக்கும் இந்த பொதுக்குழுவில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலக பாமா மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், கட்சியின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
ஈரோடு: சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்கூட, போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை. என்று அறிவித்திருந்த நிலையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க போகிறது என்ற ஆர்வம் எழுந்துள்ளது.
பாமகவை பொறுத்தவரை இந்த முறை யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை.. திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக முயன்றுவருவதாக சொல்கிறார்கள்.. அப்படி கூட்டணி வைக்க நேர்ந்தால், எப்படியும் 5, 6 சீட்டுக்களையாவது பாமகவுக்கு தர வேண்டியிருக்கும்.
திமுக கூட்டணி: ஆனால், அவர்களுக்கு தொகுதி ஒதுக்கும் அளவுக்கு திமுக தரப்பில் சீட் இல்லையாம்.. அப்படியே பாமகவை கூட்டணியில் சேர்ப்பதாக இருந்தாலும், விசிக அதனை ஏற்குமா? என்பதும் கேள்விக்குறிதான். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டு, சாதிவாரி கணக்கெடுப்பு என பல்வேறு விஷயங்களில் திமுக மீது பாமகவுக்கு அதிருப்தி இருப்பதாக தெரிகிறது. அதனால், திமுகவுடன் கூட்டணி வைப்பது டவுட்தான் என்கிறார்கள்.
அதேபோல, அதிமுக தரப்பிலும் சீக்ரெட்டான பேச்சுவார்த்தை ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், 9 + 1 என்ற ரீதியில் பாமக சீட் பேரம் நடத்தியதாகவும், அதிமுக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். அதுமட்டுமல்ல, 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரம், பிற சமுதாயத்தினரின் ஓட்டுகளை வரவிடாமல் பாமக தடுத்து விடும் என்று அதிமுக மேலிடம் நினைக்கிறதாம். அதனால், பாமகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதும் டவுட்தான் என்கிறார்கள்.
பாஜக கூட்டணி: அப்படியானால், பாஜக கூட்டணியில் இணையலாம் என தெரிகிறது. மத்திய அமைச்சர் பதவி வாக்குறுதி தந்தால் தான், கூட்டணி என்பதில் பாமகவும் உறுதியாக உள்ளதாக சொல்கிறார்கள்.
பாமக கேட்கும் இடங்களை பாஜக வழங்க நிறைய சாத்தியம் உள்ளதாம்.. முக்கியமாக, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை பாமகவுக்கு ஒதுக்கும்பட்சத்தில், அங்கெல்லாம் பெருவாரியான வன்னியர் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்று பாஜக கணக்கு போடுகிறதாம்.
இப்படி ஆளுக்கு ஒவ்வொருவிதமான கணக்குகளை போட்டாலும், டாக்டர் ஐயாவின் முடிவு என்னவென்று தெரியவில்லை.. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் உள்ளது பாமக. இப்போதுவரை வலுவான வாக்குவங்கியையும் தொடர்ந்து தக்க வைத்தும் வருகிறது.. வடமாவட்டங்களையும் தாண்டி, தென்மாவட்டங்களிலும் கூடுதல் கவனத்தை செலுத்தி, வாக்கு வங்கியை பலப்படுத்தி வருகிறது.
பாமக வாக்குகள்: அதுவும் இல்லாமல், பாமக தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அதிரடிகள் செய்யப்பட்டு, புதுரத்தம் கட்சிக்குள் பாய்ச்சப்பட்டுள்ளது. இதையெல்லாம் பிற கட்சிகளும் கவனிக்காமல் இல்லை.. ..!!
பாமக யாருடன் கூட்டணி என்பது இந்த ஒருவருட காலமாகவே சஸ்பென்ஸாக நீடித்து வருகிறது.. இதுகுறித்து செய்தியாளர்கள் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி எழுப்பும்போதெல்லாம், "நீங்க என்னை எப்படி எப்படி கேள்வி கேட்டாலும் சரி, என்னுடைய பதில் ஒன்னுதான்.. தேர்தல் சமயத்தில்தான் கூட்டணி முடிவு செய்வோம்" என்று கறாராக சொல்லி வந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான், 1ம்தேதி அந்த கூட்டணி "சஸ்பென்ஸ்" வெளிவரப்போகுது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications