செம ட்விஸ்ட்.. யாரு வி.பி. துரைசாமியா.. பாஜகவில் புது சிக்கல் போல.. திமுகவின் மாஸ்டர் பிளான்கள்?
நீலகிரியில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்டு திமுகவை வெற்றி பெற செய்வாரா ஆ ராசா
சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜகவை போலவே திமுகவும் தயாராகி வருகிறது.. அந்த வகையில் சில தகவல்களும் அரசியல் களத்தில் வட்டமடித்து வருகின்றன.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, தனித்து போட்டியிட்ட வரலாறு கிடையாது.. திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதேசமயம், அந்த பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்வதும் இல்லை.. அதிமுகவுக்கு தங்கள் பிரச்சனையை சமாளிக்கவே நேரம் போதவில்லை என்பதால், இதை பாஜகவும் சரியாக பயன்படுத்தி கொண்டு வருவதுடன், கட்சியும் வளர ஆரம்பித்துவிட்டது..

ப்ளான் 1
இப்போது அதிமுக மேலும் பலவீனப்பட்டுள்ள நிலையில், அதிமுக 2 ஆக உடைந்துள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்து அவருடன் எடப்பாடி செல்வாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது.. இப்போது போலவே பிடிவாதம் தொடர்ந்தால், எடப்பாடி டீம் இல்லாமலேயே 3வது அணி அமைத்து பாஜக போட்டியிட்டாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. காரணம், எடப்பாடி பொறுப்பில் இருந்தவரை, பாஜகவுக்கு பெருமளவு சீட்டுகளையோ, தொகுதிகளையோ தந்ததில்லை.. மறைமுக எதிர்ப்பு அரசியல் காரணமாக பாஜகவுக்கான ஓட்டுக்களும் குறைந்துவிட்டதாகவே பாஜக நினைக்கிறது..

ப்ளான் 2
எனவே 3வது அணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்றாலும், முடிந்தவரை எடப்பாடி தரப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி வருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான வியூகங்களையும் கையில் எடுத்துள்ளது.. தமிழகத்தில் இந்த முறை குறைந்தது 10 முதல் 15 சீட்டுகளை வெல்ல வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில், குறிப்பிட்ட தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் சைலண்ட்டாக வேகம் எடுத்துள்ளன.. இதில் நீலகிரியும் ஒன்றாகும்.. கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், அல்லது தனித்து போட்டியிட்டாலும் நீலகிரி தொகுதியை விட்டுவிடக்கூடாது என்பதில் பாஜக தரப்பு உறுதியாக உள்ளதாக சொல்கிறார்கள்..

போஜராஜன்
ஆனால், நீலகிரியில் வலுவாக உள்ள திமுக இதனை எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. காரணம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஊட்டி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போஜராஜன் சுமார் 5,300 ஓட்டு வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார்.. அதனால்தான், மலைவாழ் மக்களின் ஆதரவை இந்த முறை பெற்றுவிடுவது என்று தமிழக பாஜக ஆர்வம் காட்டி வருகிறது.. அதுமட்டுமல்ல, சமீபத்தில் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக, நீலகிரி தொகுதி முழுவதும் போராட்டங்கள் வெடித்தன..

அச்சாரம்
இந்து அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய இந்த போராட்டத்திற்கு சில இடங்களில் பொதுமக்கள் ஆதரவும் இருக்கத்தான் செய்தது.. இதுதான் நீலகிரியில் பாஜகவுக்கான அச்சாரமாகவும், முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், திமுக இதனை லேசில் விடாது என்கிறார்கள்.. காரணம், ஆ.ராசாவை பொறுத்தவரை நீலகிரியில் பலம் பொருந்திய தலைவராக இன்னமும் உள்ளார்.. எப்பவுமே ஆ.ராசா பெரம்பலூர் தொகுதியில்தான் போட்டியிடுவார். ஆனால் அந்த தொகுதி பொது தொகுதியாக மாற்றப்பட்டதும், தனித் தொகுதியாக மாறிய நீலகிரியில் 2009-ம் ஆண்டு எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

துரைசாமி
அதனால் 2014 தேர்தலிலும் ஆ.ராசா நீலகிரி தொகுதியிலேயே நிறுத்தப்பட்டார்.. இதுபோக நீலகிரியில் அதிமுகவின் உட்கட்சிபூசலும், ஆ.ராசாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.. இந்த பூசல் அதிமுகவில் இன்னமும் தொடரத்தான் செய்கிறது.. அதிமுகவின் இந்த பலவீனத்தைதான் கடந்த முறை பாஜகவும் பயன்படுத்தி கொண்டுவிட்டது.. சில தாராளங்களையும் தொகுதியில் காட்டியதால், குறிப்பிட்ட வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ளவும் முடிந்துள்ளது.. இப்போது இந்த நீலகிரி தொகுதிக்கு, பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிட போவதாக ஒரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கும்சூழலில், புதிதாக இன்னொரு தகவல் வட்டமடிக்கிறது.

உடன்பிறப்பு
பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமியும் களத்தில் இறங்கி உள்ளாராம்.. கடந்த முறை தேர்தலின்போதே, கெங்கவல்லி தொகுதியை தன்னுடைய மகனுக்கு துரைசாமி கேட்டிருந்தார்.. ஆனால் கிடைக்கவில்லை... இப்போது, மறுபடியும் மகனுக்காக நீலகிரியை கேட்க நினைப்பதாக தெரிகிறது.. இப்போது சிக்கல் என்னவென்றால், எல்.முருகனும் சரி, துரைசாமியும்சரி, இருவருமே தெலுங்கு பேசும் அருந்ததியர்கள்.. இருவருமே உறவினர்களும்கூட.. இருவருமே ஒரே தொகுதிக்கு குறி வைத்துள்ள நிலையில், கமலாலயம் என்ன முடிவெடுக்க போகிறதோ தெரியவில்லை. ஆனால், இவர்கள் இருவரில் யாருக்கு நீலகிரியை தந்தாலும், அதை அசால்ட்டாக முறியடித்து வெற்றி வாகை சூட, திமுக தரப்பு துரிதமாகி வருகிறதாம்.. இதற்கான அறிகுறி அடுத்த சில நாட்களில் தெரியும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்..!!!












Click it and Unblock the Notifications