ஏ.ஆர்.ரஹமானுக்கு இனி வேலை இருக்காதா? AI மூலம் இசையை உருவாக்கும் OpenAI! அடேங்கப்பா!
சென்னை: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது இசை துறையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தயாராகி வருகிறது. குறிப்பாக OpenAI நிறுவனம், எழுத்து மற்றும் ஆடியோ குறிப்புகளிலிருந்து இசையை உருவாக்கும் திறன் கொண்ட புதிய ஏஐ கருவியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது மட்டும் சாத்தியமானால், எதிர்காலத்தில் ஏர்.ஆர்.ரஹமான் போன்ற இசையமைப்பாளர்களுக்கு வேலையில்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுவிடுமோ? என்று அச்சம் எழுந்திருக்கிறது.

தி இன்ஃபர்மேஷன் எனும் அமெரிக்க செய்தி ஊடகம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. இந்த தகவலின்படி நியூயார்க் நகரில் உள்ள ஒரு உலகப் புகழ்பெற்ற 'ஜூலியார்ட்' எனும் தனியார் கலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து புதிய ஏஐ கருவியை உருவாக்க ஓபன் ஏஐ நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டம் குறித்து கூறும் நிறுவனத்தின் இயக்குநர்கள், "இது AI உதவியுடன் இசையை உருவாக்கும் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த ஏஐ கருவி பயன்பாட்டுக்கு வந்தால், வீடியோக்களுக்கான பின்னனி இசையை எளிதாக உருவாக்க முடியும். அல்லது பதிவு செய்யப்பட்ட குரல்களுடன் கிட்டார் போன்ற இசைக்கருவிகளைச் சேர்க்கலாம். இந்தச் சேவை எப்போது வெளியாகும் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்படி உருவாக்கப்படும் சாப்ட்வேர், தனி அப்ளிகேஷனாக வெளிவருமா? அல்லது ChatGPT, Sora போன்ற OpenAI-ன் ஏற்கனவே உள்ள தளங்களுடன் ஒருங்கிணைக்கப்படுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
தற்போதுவரை ஜூலியார்ட் கலை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து, இசை பதிவுகளை ஓபன் ஏஐ நிறுவனம் சேகரித்து வருகிறது. இதை வைத்துதான் மொத்த ஏஐ மாடலும் உருவாக்கப்பட இருக்கிறது. இசையை பொறுத்தவரை, ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு முந்தைய அனுபவம் இருக்கிறது. ChatGPT-யை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே ஜூக்ஸ் பாக்ஸ் எனும் அப்ளிகேஷனை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. ஜூக்ஸ் பாக்ஸ் என்பது, இசையின் பாணிகள், கலைஞர்கள், மற்றும் பாடல் வரிகளை உள்ளீடாகக் கொடுத்து, அதன் மூலம் முழுமையான புதிய பாடல்களையும் இசையையும் உருவாக்கக்கூடிய ஒரு மாடலாக இருந்தது.
தற்போது இந்நிறுவனம் பேச்சுக்களை டெக்ஸ்ட்டாகாக மாற்றுவதிலும், டெக்ஸ்ட்டை வாய்ஸாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல ஜெனரேட்டிவ் மியூசிக் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது. ஜெனரேட்டிவ் மியூசிக் என்பது, மனிதர்களின் நேரடி ஈடுபாடு இல்லாமல், ஒரு அல்காரிதம் மூலம் உருவாக்கப்படும் அல்லது தானாகவே உருவாக்கிக் கொள்ளும் இசையாகும். இதிலும் ஓபன்ஏஐ கவனம் செலுத்துகிறது.
தற்போது தொடக்க கட்டத்தில் இந்த தொழில்நுட்பம் இருந்தாலும், எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவுக்கு இது வளரும். அப்படி வளரும்போது இசையமைப்பாளர்களுக்கு என தேவை குறைந்துவிடும். ரஹ்மான், அனிரூத் போன்றோரின் தேவை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications