Slap Chicken: 23,034 முறை சிக்கனை பளார்னு அறைந்தால்! உடனே வெந்துவிடுமாமே? மெய்யாலுமாவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னாது சிக்கனை 23,034 முறை அடித்தாலே வெந்துவிடுமா? கேஸ், அடுப்பு இல்லாமல் சிக்கன் சமைக்கும் முறை தற்போது வைரலாகி வருகிறது. இது உண்மையா என்பதை பார்க்கலாம்.

எந்த ஒரு சமைக்க வேண்டும் என்றாலும் அதற்கு நெருப்பு தேவையில்லை. அது விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் ஸ்டவ், கேஸ் அடுப்பு, மைக்ரோ வேவ் ஓவன், இன்டக்ஷன் ஸ்டவ் என எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

chicken cooking

அதிலும் "நோ ஆயில் நோ பாயில்" என்ற முறையின்படி ஊற வைத்தல் முறையில் சமைக்கும் முறையும் ஆங்காங்கே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கேஸ், அடுப்பு, நெருப்பு இல்லாமல் வெறும் கைகளால் சிக்கனை அடித்தாலே அது வெந்துவிடும் என வினோத கருத்து வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை சிக்கனை நெருப்பு இல்லாமல் சமைக்க 23,034 முறை அறைய வேண்டுமாம். அப்படி அடிக்கும் போது நம் கைகளில் இருந்து உருவாகும் வெப்பத்தால் சிக்கன் வெந்துவிடும் என்கிறார்கள்.

சிலர் ஒரே அடியில் கூட சிக்கனை வேக வைக்க முடியும் என்கிறார்கள். இது நிஜம்தானா, இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்னவென்று பார்க்கலாம். அதாவது ஒரு பொருள் வேகமாக இயங்கி இன்னொரு பொருள் மீது மோதும்போது அதன் இயக்க ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறும்.

சிக்கனை அடித்து சமைக்கும் இந்த அறிவியலும் அப்படித்தான் வேலை செய்கிறது. அடுப்பே இல்லாமல் சமைக்கலாமா, ஹய்யா ஜாலி என நினைக்காதீர்கள். அது அவ்வளவு எளிதல்ல.

கோழியை அதிவேகமாக அறையும் போது ஒரு சிறப்பு இயக்கம் உங்கள் கைகளில் உருவாகும். அந்த இயக்கத்துடன் சிக்கனை அறையும் போது கையில் இருந்த சக்தி, சிக்கன் மீது செல்கிறது. தொடர்ந்து இவ்வாறு செய்வதால் அது வெப்பமாக மாறுகிறது.

அதனால் திரும்ப திரும்ப அடித்துக் கொண்டே இருந்தால் சிறிது சிறிதாக வெப்பம் உயரும். குளிர் காலங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஏன் வெயில் காலங்களில் கூட ஏசி அதிகம் இருக்கும் இடங்களில்அந்த குளிரை சமாளிக்க உள்ளங்கைகளை வேகமாக தேய்த்தால் சில வினாடிகளில் கை சூடாகும்.

உராய்வு மூலம் வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு முறையும் சிக்கனை அடிக்கும் போது அதிகளவில் வெப்பம் வெளியாகும். அந்த வகையில் 23,034 முறை சிக்கனை அடிக்கும் போது அது வேகுறது தேவையான வெப்ப நிலை கிடைக்கும். ஆனால் இத்தனை முறை அடித்தால் சிக்கன் வேகாமல் நசுங்கிவிடும் என்கிறார்கள்.

கோழியை வேகமாக அறையும் வகையில் ஒரு இயந்திரத்தை லூயிஸ் வைஸ் என்பவர் உருவாக்கினார். ஆரம்பத்தில் நிறைய சோதனைகள் இருந்த போதிலும் வெப்பநிலை அதிகரிப்பால் கோழி நசுங்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கோழியின் வடிவம் சிதையாமல், கோழியை அடிக்கும் முறையில் ஏற்படும் வெப்பத்தை கொண்டே முழுமையாக சமைத்து லூயிஸ் சாதனை படைத்தார். என்னதான் இது ஒரு அறிவியல் என்றாலும் கூட! இதை வீட்டில் செய்ய முடியாது. இப்படி 23,034 முறை அடிப்பதற்கு பதிலாக அடுப்பில் வைத்து வேகவைத்து விடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+