Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓங்கியடித்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் திடீர் "பிணைப்பு"..எடப்பாடி பழனிசாமியை முந்திய திமுக.. என்னவாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும்சூழலில், கூட்டணி தொடர்பான வேலைகள் மும்முரமாகி உள்ளன. அந்தவகையில் அதிமுகவை முந்திக்கொண்டுள்ளது திமுக.

அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக இல்லை என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததுமே, ஓடோடிவந்து வாழ்த்தை சொல்லி வரவேற்றது விசிகவின் திருமாவளவன்தான்..

Can CPM Balakrishnan alliance with ADMK Edapadi Palanisamy and whats MK Stalins Master Plan

பாஜக கூட்டணி: "பாஜக கூட்டணியை அதிமுக முறித்து கொண்டிருப்பது வரவேற்கதக்கதாகும். அதிமுக தனித்து போட்டியிட்டால் அதன் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக இணைந்து பயணித்தால் அதன் வங்கி குறைந்துவிடும்'' என்று மீண்டும் கூறியிருந்தார் திருமாவளவன்.

இதுபோலவே, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒரு எண்ணம் இருப்பதாக தெரிகிறது.. கடந்த முறையே அதிமுகவுடன் கூட்டணி வைக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் முயன்றதாக ஒரு பேச்சு இருந்தது.. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகும்கூட, கூட்டணி தலைமையிடம் குறைகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டியும், ஆளும் அரசை எதிர்த்து கண்டன அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்களை விசிக போலவே சிபிஎம்மும் முன்னெடுத்து வருகிறது..

இண்டியா கூட்டணி: அதனால், இந்த முறை, பாஜக இல்லாத அதிமுகவுடன் கூட்டணி வைக்க, விசிக, காங்கிரஸ் தயங்காது என்கிறார்கள்.. திமுக கூட்டணியை விட்டுவிடக்கூடாது என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தாலும்கூட, மற்ற காங்கிரஸ் சீனியர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார்களாம்.. 20 சீட் வரை காங்கிரசுக்கு ஒதுக்க அதிமுகவும் ஓகே சொன்னதாக தகவல்கள் கசிந்தன. இந்த லிஸ்ட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரும் அடிபட்டுது.

கூட்டணியிலேயே இருந்தாலும்கூட, ஆளும் தரப்பை எதிர்த்து பல கண்டன அறிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது கம்யூனிஸ்ட் கட்சி.. அவ்வப்போது, அரசின் செயல்பாடுகளை இடித்துரைத்தும், சுட்டிக்காட்டியும் வருகிறது.. எனினும், கூட்டணி மாறி போட்டியிட்டால், கூடுதல் சீட் பெறுவதுடன், ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்றும் இந்த கட்சிகள் எல்லாம் கணக்கு போட்டு வருவதாக தெரிகிறது.

பாலகிருஷ்ணன்: அதற்கேற்றவாறு, திருப்பத்துார் மாவட்டத்தில், பட்டியலின பெண் பஞ்சாயத்து தலைவர், 2 வருடத்துக்கும் மேலாக பதவியேற்காமல் இருக்கும் பிரச்சனையை திடீரென கிளப்பினார் மாநில செயலர் பாலகிருஷ்ணன்.. இது, திமுகவுக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது... உடனே இதே பிரச்சனையை கவர்னர் ரவியும் பேசியதால், திமுகவுக்கு கூடுதல் சிக்கலை உண்டாக்கியது.

தர்மசங்கடம்: அதேபோல, 2 நாட்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில், எடப்பாடி பழனிசாமியின் பேட்டி முதல் பக்கத்திலும், முதல்வர் ஸ்டாலினின் செய்தி, 6ம் பக்கத்திலும் வெளியாகியிருந்தன.. இதையும் திமுக தரப்பு கவனிக்காமல் இல்லை.

கடந்த முறை 2019 தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது.. ஆனால், வரும் தேர்தலில் கூடுதலாக திருச்சியையும் கேட்பதாக தெரிகிறது..

கூட்டணி முறிவு: இது தொடர்பாக திமுக மேலிடம் என்ன முடிவெடுக்க போகிறதென்று தெரியவில்லை. ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிடவும், முதல்வர் ஸ்டாலினை விட, எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவத்தை கம்யூனிஸ்ட் கட்சி அளிப்பதாக தகவல்கள் பரபரத்தன. அதுமட்டுமல்ல, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்க, ரகசிய பேச்சை அதிமுக துவக்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்..

இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக விழித்து கொண்டுள்ளது.. தங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறுவதை, திமுக கொஞ்சம்கூட விரும்பவில்லை.. அதனாலேயே கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசி, கூட்டணியை உறுதிப்படுத்து வேலையை துவக்கிவிட்டது.. அந்தவகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை, அறிவாலயத்தில் சந்தித்து பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

பாலகிருஷ்ணன்: இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் பேசியபோது, அதிமுக - பாஜக பிரிந்தாலும், அவர்கள் ஒன்றாக இருந்த போது எதிர்த்து போராடியது போலவே தொடர்ந்து போராடுவோம். வரும் 13, 14ம் தேதி கட்சி மாநிலக்குழு கூட்டம் நடக்க உள்ளது. அதில், தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

ஆக, இந்த சந்திப்பின் மூலம், அதிமுகவை முந்திக்கொண்டு, கூட்டணியை உறுதி செய்துள்ளதுடன், அதிமுகவுக்கும் ஒரு ஷாக் தந்துள்ளார் ஸ்டாலின். எனினும், திருச்சியை யாருக்கு திமுக ஒதுக்கக்கூடும் என்று தெரியவில்லை. கூட்டணி மட்டுமே உறுதியாக உள்ளதால், தொகுதி பங்கீடு, சீட் விவகாரம் எல்லாம் இனிமேல்தான் தெரியவரும் போல.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+